நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ஒவ்வொரு இடங்களுக்கு சென்று படத்தினை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். குறிப்பாக கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தீவிரமாக நடைபெற்ற இந்த ப்ரோமோஷனில் மொத்த நடிகர் நடிகைகள் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக, சமீபத்தில் ஐஸ்வர்யா ராய்யுடன் கலந்து கொண்ட ஜெயம் ரவி செய்த செயல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேடையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயம் ரவி இருவரும் ஒன்றாக நடந்து செல்லும்போது ஐஸ்வர்யா தவறி ஜெயம் ரவியை இடித்துவிடுகிறார். அதற்கு ஜெயம் ரவி மிகவும் உற்சாகத்துடன் கையை தூக்கிக்கொண்டு ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலரும் உங்க மனைவி பார்த்தால் என்ன ஆகும்..? என்பது போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…