விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் தொடப்படவில்லையாம். அதனால் கவனம் ஈர்க்கவே துப்பறிவாளன் 2 போஸ்டர் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்டு பின்னர் விஷால் – மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விஷாலே இயக்கும் பொறுப்பை கையில் எடுத்த திரைப்படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் வெற்றியடைந்ததை அடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் துப்பறிவாளன் 2 தொடங்கப்பட்டது.
துப்பறிவாளன் -2 படத்திற்கான புதிய போஸ்டர் அண்மையில் வெளியானது. படம் ஷூட்டிங் ஜனவரியில் தான் தொடங்க உள்ளது. அதற்குள் பட போஸ்டர் ஏன் வெளியிடப்பட்டது என ஒரு காரணம் கோலிவுட்டில் உலா வருகிறது.
அதாவது, விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால், விஷால் நடிப்பில் அடுத்ததாக ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் ஆகாமல் இருக்கிறதாம்.
அதனால், விஷால் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் உள்ள துப்பறிவாளன்-2 திரைப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வீரமே வாகை சூடும் திரைப்பட வியாபாரத்தை தொடங்கவே விஷால், துப்பறிவாளன் 2 திரைப்பட போஸ்டரை வெளியிட்டதாக கோலிவுட்டில் ஒரு தரப்பு கூறி வருகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…