அடேங்கப்பா..!இந்திய கலாச்சாரத்திற்கு இப்படி ஒரு அறிவியல் காரணம் இருக்கா.?

indian culture (1)

சென்னை –நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் ஒவ்வொரு செயல்களும் சில அறிவியல் காரணங்களை அடக்கியுள்ளது.

வணங்குதல் ;நம் இரு கைகளை இணைத்து வணங்கும் போது மரியாதை மற்றும் அன்பை  வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது .அது மட்டுமல்லாமல் இது யோகாவில் அஞ்சலி முத்ரா எனவும் கூறுவார்கள். நம் உடலில் விரல் நுனிகள் தான் அதிக ஆற்றலை கொடுக்கும் பகுதியாகும். இவ்வாறு வணங்கும் போது மூளையின் நரம்பு தூண்டப்பட்டு சுறுசுறுப்பை ஏற்படுகிறது.

மேலும் நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒரு சில ஆற்றலை கொடுக்கும் தன்மை உண்டு. சுண்டு விரல் மனச்சோர்வையும் ,மோதிர விரல் நல்ல  செயல்பாட்டையும், நடுவிரல் மெருகேற்றுதலையும், ஆள்காட்டி விரல் ஆன்மாவையும், கட்டைவிரல் இறுதி ஆத்மாவையும் குறிப்பிடுகிறது. இதுவே வணக்கம் கூறுதலின் அறிவியல் காரணமாகும் .

பட்டு அணிதல் ;கோவிலுக்கு சென்றால்  பட்டு அணிவது  சிறப்பாக கூறப்படுகிறது. அது ஏனென்றால் பட்டுக்கு மின்காந்த சக்தியை ஈர்க்கும் தன்மை உள்ளது .இது நம் உடலுக்கும்  கடத்துகிறது. இதன் மூலம் மன அமைதியை ஏற்படுத்துகிறது.

நெற்றியில் குங்குமம் வைத்தல் ;திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம்  வைப்பது திருமணம் ஆனதற்கான அடையாளம் கிடையாது ,குங்குமமானது  சுண்ணாம்பு, மஞ்சள், மெர்குரியால் ஆனது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கவும், தாம்பத்திய உணர்ச்சிகளை தூண்டவும் உதவுகிறது .இதனால் தான் கணவனை இழந்த பெண்கள் குங்குமம் வைக்க கூடாது என்கிறார்கள். மேலும் இது பிட்யூட்டரி கிளான்ட் நோக்கி வைக்கப்படுகிறது. இந்த கிளாண்ட்  தான் நம் மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கும் உடலில் ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் காரணம்.

வளையல் அணிவதன் காரணம்; பெண்கள் வளையல் அணிவதால்   வீட்டில் உள்ள எதிர்மறை சக்தி வெளியேறும் என்றும் வளையல் மகாலட்சுமிக்கு உரிய மங்கள  பொருளாகவும் கருதப்படுகிறது. மேலும் இது மணிக்கட்டுகளுக்கு பலத்தையும் ஏற்படுத்துகிறது.

மெட்டி அணிதல் ;பெண்கள் மெட்டி அணியும் விரலின் நரம்பானது  கருப்பை மற்றும் இதயத்துடன் தொடர்புடையது. இதனால் கருப்பை வலிமை பெறுகிறது.

கம்மல் அணிதல் ;காதில் கம்மல் அணிவதால் ஹெர்னியா போன்ற நோய்கள் வருவது தடுக்கப்படும் என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. மேலும் முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

துளசி செடியை வலம் வர காரணம்;  துளசிக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .  அந்த காற்றை  சுவாசிக்கும் போது நம் சுவாச மண்டலம் சீராக செயல்படும். 24 மணி நேரமும் ஆக்ஜிசனை  தரக்கூடிய செடி என்பதால் தான் துளசியை சுற்றி வருகிறார்கள் .  மேலும் இது ஆன்மீகத்தில் புனிதமான செடியும் ஆகும்.

பெரியோர்கள் காலை தொட்டு வணங்குதல்  ; பெரியோர்கள் காலை தொட்டு வணங்குவது மரியாதைக்காக மட்டுமல்ல இதன் மூலம் நாம் ஈகோ குறைந்து இரக்க குணம் உருவாகும். அது மட்டுமல்லாமல் பெரியவர்களின் ஆற்றல் நமக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மூடநம்பிக்கைகள் என்று கூறப்படும் ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் ஒரு அறிவியல் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
James Franklin srh 2025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson
Vikram in Veera dheera sooran film posters