அடேங்கப்பா.! செருப்பால் கூட யோகம் வருமா? செருப்பின் சூட்சம ரகசியங்கள்.!

Published by
K Palaniammal

Slipper secret-செருப்பின் சூட்சும ரகசியங்கள் மற்றும் எந்த ராசியினர் எந்த நிற செருப்புகளை அணியலாம்  என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

மழைக்காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறோம் என்றால் முதலில் அணிவது செருப்பு தான். நம் பாதத்தை பாதுகாக்கும் ஒரு முக்கிய பொருளாகவும் உள்ளது. நாம் சாதாரணமாக நினைக்கும் செருப்பிற்கு  கூட நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய தன்மை உள்ளது.

செருப்பின் சூட்சமங்கள்:

செருப்பானது சனீஸ்வரனுக்கு உகந்த பொருளாக கருதப்படுகிறது. பொதுவாக நமக்கு பொருத்தமில்லாத அதாவது நம் கால்களை விட செருப்பின் அளவு சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கக் கூடாது. அப்படி உள்ளதை நாம் பயன்படுத்துகிறோம் என்றால் நம்முடைய வருமானம் தடைபடும், உத்தியோகத்தில் பதவி உயர்வு தடைபடும், வாழ்வில் முன்னேற்றம் இருக்காது.

அதனால் உங்கள் கால்களுக்கு  கச்சிதமாக பொருந்தும் செருப்புகளை பயன்படுத்துங்கள். மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது செருப்புகளை மாற்றுவது நல்லது. மிக பழைய செருப்புகள் மற்றும் தூக்கி எறியப்படும் நிலையில் இருக்கும் செருப்புகளை பயன்படுத்தக் கூடாது.

நவகிரகங்களில் சனிபகவானுக்கு நாம் அனைவருமே பயம் கொள்வோம் .சனிபகவான் நீதிக்கு அரசர் என அழைக்கப்படுகிறார் ஒருவர் என்ன செய்கிறாரோ அதற்கான தண்டனையை  மட்டுமே வழங்கக் கூடியவர். அதனால் அனைவருமே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் ஒரு ராசியிலிருந்து செல்லும்போது அந்த ராசியினரை   வாழ்வில் மிகப் பக்குவம் அடைந்தவராக மாற்றி செல்வார்.

செருப்பு தொலைந்தால் நல்லதா? கெட்டதா?

ஒரு சிலர் கோவிலுக்கோ  அல்லது வேறேனும் நிகழ்வுகளுக்கோ செல்லும் போது செருப்பை தொலைத்து விடுவார்கள். அதனால் வருத்தமும் அடைவார்கள். ஆனால் உண்மையிலேயே செருப்பு தொலைவது நல்லதாகும். சனி பகவானால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் உங்களை விட்டு அகலும் . உங்களுடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகள் குறைந்து விடும்.

ஒரு சிலர் இந்த சாஸ்திரம் தெரிந்தவர்கள் வேண்டுமென்றே கோயில்களுக்குச் செல்லும் போது செருப்புகளை விட்டு விட்டு வருவார்கள் அவ்வாறு செய்தோமேயானால் புதிய தொழில் அமையும் .தொழில் முன்னேற்றம் ஏற்படும் .வருமானம் கிடைக்கும். எனவே தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பவர்கள் எடுத்த காரியத்தில் தடை இருப்பவர்கள் இவ்வாறு கோவிலுக்கு சென்றால் செருப்புகளை விட்டு வருவது நல்லது.

மேலும் மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் அந்த செருப்பு இருக்க வேண்டும் .புதிதாக இருந்தால் மிக நல்லது. அதுமட்டுமல்லாமல் தானமாகவும் கொடுக்கலாம் . குறிப்பாக கோடை காலத்தில் தானமாக வழங்குவது மிக சிறப்பு.

செருப்பு வாங்கும் கிழமைகள் ?

நீங்கள் பிறந்த கிழமைகளில் செருப்பு வாங்குவதை தவிர்க்க வேண்டும் .மேலும் நீங்கள் பிறந்த கிழமைக்கு முந்தய நாளில் வாங்குவது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் .அதாவது நீங்கள் செவ்வாய் கிழமையில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் திங்கள் அன்று வாங்க வேண்டும் .

ஒருவேளை பிறந்த கிழமை தெரியாதவர்கள் புதன் கிழமைகளில் வாங்கலாம் .இதன் மூலம் உங்களுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தி கொடுக்கும் .

எந்த ராசியினர் எந்த நிற செருப்புகளை அணியலாம்?

  • மேஷ ராசியினர் மற்றும் விருச்சிக  ராசியினர் கருப்பு நிற செருப்புகளை அணியக்கூடாது .அதற்கு பதில் சந்தனம் மற்றும் வெள்ளை நிற செருப்புகளை அணியலாம்.
  • ரிஷபம் மற்றும் துலாம் ராசியினர் சிகப்பு மற்றும் கோல்டன் நிற செருப்புகளை அணியலாம்.
  • மிதுனம் மற்றும் கன்னி ராசியினர் வெள்ளை மற்றும் சிகப்பு நிற செருப்புகளை அணியலாம் .
  • மகரம் மற்றும் கும்ப ராசியினரும் கருப்பு நிற செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும் .அதற்குப் பதில் கோல்டன், சில்வர் ,ஊதா நிற செருப்புகளை அணியலாம்.
  • கடக ராசியினர் கருப்பு, பச்சை, ஊதா இந்த நிறங்களில் செருப்புகளை அணியலாம்.
  • சிம்ம ராசியினர் வெள்ளை, ஊதா, கருப்பு போன்ற நிறங்களை அணியலாம்.
  • தனுசு  மற்றும் மீன ராசியினர் அரக்கு, சந்தனம், சில்வர் போன்ற நிற செருப்புகளை அணியலாம்.

இவ்வாறு நீங்கள் உங்கள் ராசிக்கு ஏற்றார் போல் தேர்வு செய்து அணியும் போது அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். மேலும் நீங்கள் அணியும் செருப்பானது தூய்மையாகவும் உங்களுக்கு கட்சிதமாகவும் இருக்க வேண்டும் இது உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

27 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

32 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

55 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago