temple worship [File Image]
நம் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடும் வழிபாட்டில் பல்வேறு முறைகள் உள்ளது ,அதில் அர்ச்சனை செய்வதும் ஒரு முறையாகும், அதை நம் பெயரில் செய்யலாமா அல்லது இறைவன் பெயரில் செய்வதா என சிலருக்கு சந்தேகம் ஏற்படும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
அர்ச்சனை என்பது அருள் சித்தல் என்பதாகும், அதாவது அர்ச்சனை பாட்டு ஆகும் நாமங்களால் இறைவனை பாடி வழிபட கூடியது. அங்கு உள்ள இறைவனிடம் நம் மனதில் உள்ள பிரார்த்தனைகளை விண்ணப்பம் செய்து அவரிடத்தில் தெரிவித்து வழிபடக்கூடிய வழிபாடும் முறையாகும்.
நம் பெயரில் அர்ச்சனை செய்வது எதற்கு தெரியுமா ?
இந்த வழிபாட்டு முறையில் நம்முடைய பெயரை சொல்லி பண்ணுவது ஏனென்றால் இவ்வுலகில் எவ்வளவோ பெயர்களை இறைவன் படைத்திருப்பார் அதில் இந்தப் பெயர் கொண்ட இந்த நட்சத்திரம் லக்னம் கொண்ட இன்னாராகிய நான் வந்துள்ளேன் என்று இறைவனிடம் தன்னை குறிப்பிட்டு அறிமுகப்படுத்தி தனக்கு அனுக்கிரகம் பண்ணுமாறு முறையிடுவது. இவ்வாறு தன் பெயரில் அர்ச்சனை செய்வதால் ஒன்றும் தவறில்லை. இதுவும் ஒருவகை அர்ச்சனை தான்.
சுவாமி பெயரில் அர்ச்சனை செய்வது எதற்கு தெரியுமா ?
ஒரு சிலர் சுவாமி பெயரில் அர்ச்சனை செய்வார்கள், ஏன் சுவாமிக்கே அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் வரும் ஆனால் இதுவும் ஒருவகை அர்ச்சனை தான்.
பெயரிலான் ஊரிலான் குலமிலான் சுற்றமில்லான் இப்படி எதுவுமே இல்லாத இந்த பெருமானுக்கு நாம் தான் ஊருக்கு ஊர் ஒரு பெயர் வைத்துள்ளோம். இறைவனுக்கு ஏது பெயர் அவர் பெயர் இல்லா ஊர் இல்லா மொழி இல்லா தெய்வீக சக்தி ஆவார். இவ்வாறு நாமே ஏற்படுத்திய பெயருக்கு அர்ச்சிக்கும்போது அதன் ஆற்றல் அதிகரிக்கும் இறைவன் மிக உயர்ந்து வாழ்வார்.
கோவிலில் பிரார்த்தனையை இந்த இடத்தில் தான் சொல்ல வேண்டுமா? அட இது தெரியாம போச்சே….!
இப்போ நம் பெயரில் அர்ச்சனை செய்தால் நாம் மட்டும் தான் வளமாக வாழ்வோம் இதுவே இறைவன் பெயருக்கு பண்ணினால் கடவுள் வளமாவர் அதனால் கடவுளால் படைக்கப்பட்ட நாமும் அனைத்து உயிரினங்களும் வளமாகும் ,இதனால் இது தெரிந்தவர்கள் தான் கடவுள் பெயருக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.
இப்போது நமக்கு தேவை இருக்கிறது வேண்டுதல் இருக்கிறது என்றால் நம் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம், ஏனென்றால் கேட்பதற்கு தான் நாம் இருக்கிறோம் கொடுப்பதற்கு தான் இறைவன் இருக்கிறார். ஆனால் ஒரு சில பக்குவப்பட்ட ஆன்மாவாக இருந்தால் தான் கடவுள் பெயரில் அர்ச்சனை செய்வார்கள் அதாவது அர்ச்சனை என்பது அவரவர் மனப்பக்குவத்திற்கு உட்பட்டது. ஒரு குழந்தை ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதற்கும் ஒரு பெரியவர் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கும் இதுதான் நம் பக்குவ நிலையில் தீர்மானிக்கிறது. ஆகவே பக்குவப்பட்ட ஆன்மாக்கள் எல்லாவற்றையும் உணர்ந்தவர்கள் தான் கடவுள் பெயருக்கு அர்ச்சனை செய்வார்கள்.
அர்ச்சனை என்பது மிக அவசியம்தான் நம் தேவைகளை இறைவனிடம் கேட்டு வாழ்த்தி வழிபட்டால் அந்த முழு பலனும் பெற்று நாம் வாழலாம்..
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…