புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம்கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துரசிக்கின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரிந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணிர் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் விமர்சையாக திருவிழா நடக்கும். அதேபோல், இந்த ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 3ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படைத்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் […]
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு விழா நடத்தும் மரபு குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோயில் இணை ஆணையர் திணறினார். வரும் 27-ஆம் தேதி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கு நேரம் குறிக்கப்பட்டது. பணிகள் நிறைவடையாதது மற்றும் ஆகம விதிகள் மீறல் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விளக்கமளிக்க நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கோயில் செயல் அலுவலர் ரோஷினி […]
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனை தொடர்ந்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவிலும் மக்களும்,பக்தர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு முளைப்பரி எடுத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,
அக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்குசென்னைஉயர்நீதிமன்றம் உத்திரவு…!! கும்பகோணம் சுற்றியுள்ள கோவில் குளங்கள் 44 மற்றும் 11 கால்வாய்களில் உள்ள 923 அக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதையெடுத்து யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி அப்துல் குத்துஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்திரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,
2500 வருடங்கள் பழமையான மதுரை மாநகரானது தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது.இன்னும் அளவிட முடியாத கேள்விகள் உள்ளன இன்றளவும் ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களால் கூட விளக்க முடியாத அதிசயங்கள் நிறைந்துள்ளன மதுரை நகரானது திருவாலவாய் , சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் எனவும் பல்வேறு காலக்கட்டத்தில் ஆட்சி செய்த […]
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம் நடந்தது விழாவின் போது ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாகமாக விழாவை கொண்டாடினார்கள். ஈரோடு மாவட்டத்தில் பெருமை பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குவது ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில். கொங்கு மண்டலத்தின் குல தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோவில் ஈரோட்டில் அமைந்து உள்ளது. பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் (நடுமாரியம்மன்), காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் […]
கரூர் அருகே நானபரப்பில் மாரியம்மன் கோவில்உள்ளது.இந்த கோவிலில் திருவிழா நடத்துவதுதொடர்பாகஇருதரப்பினரிடையே நெடுங்காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.இதனால்கோவிலைஇந்துசமயஅறநிலைய துறை கடந்த 4 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறது.இந்நிலையில் தக்காராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவிலில் இன்று பூச்சாற்றுதல் விழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த தக்கார் ராதாகிருஷ்ணன் கோவிலில் திருவிழா நடத்த கூடாது எனவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பு திருவிழா நடத்த வேண்டும் எனவும், அதுவரை கோவில் விழா நடைபெற […]
அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் தமிழ்நாட்டின் பெருமையும்,பழமையும் வாய்ந்த மதுரையில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இரு சமயங்களான சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரையில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண விழாவுடன் காலங்காலமாக இணைத்துக் கொண்டாடப் படுகிறது. தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை வருடப் பிறப்பாகவும் சித்திரைத் திருவிழாவாகவும்கொண்டாடுபடுகின்றது சித்திரைத் திருவிழா மதுரையில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான பத்தாம் நாளில் […]
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம் ஏனென்றால் அம்பாள் இப்பூவுலகில் அவதரித்து அகிலாண்ட நாயகனை அடைந்தாள் என்பதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாணம் வைபம் நடைபெறுகிறது மீனாட்சி திருக்கல்யாண வரலாறு…! மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு கொண்டாடியது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றதும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் […]
ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம்”சிவன்” சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார். சிவசக்தியால் வந்த சிவராத்திரி…! அதன்பால் அன்னை பார்வதி தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் […]
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில்அதாவது மாலை 4.00-7.30 மணி வரை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் […]
சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேர்த் திருவிழா – சித்திரை 4, (17/04/2018) செவ்வாய்கிழமை காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல். அன்று இரவு 9.00 மணிக்கு திருத்தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி. ( அழைப்பிதழ் இனைத்துள்ளேன்) கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு 17/04/2018. சித்திரை திருத்தேர் விழா. அம்மனுக்கு மிகமிக விசேஷமானது. சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே ‘சாய்ஞ்சா கண்ணபுரம், […]
சிவ பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக […]
ஏற்றம் வரம் தரும் வாரஹி வழிபாடு….! வராஹி மனித உடலும், வராஹி(பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , அடைக்கலாம் அளிப்பதிலே மாரிக்கு நிகரானவள். இவள் லலிதை தேவியின் படைத்தலைவி இருப்பவள், சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர(காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும் சிவனின் அம்சமாக விளங்கும் வாரஹி…! தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராஹி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். […]
சிறப்பான வாழ்வு தரும் சித்திரை….! உலகத்தன் இயக்கம் ஒன்பது கோள்களை கொண்டே இயங்குகிறது அந்த நவகோள்களில் தலைமை கோளாக இருப்பவர் சூரியன் சித்திரை மாதத்தில் தான் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகிறார் அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியாக பயணித்து,பங்குனி மாதத்தில் 12 ராசியான மீனத்தில் சஞ்சாரம் செய்வார் ஒவ்வொரு ஆண்டும் இதே சுழற்சியே இருக்கும் சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிப்பதையே “சித்திரை வருடப்பிறப்பு” என்கின்றனர் தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது […]
ஆனைமுகனை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், முக்கியத்துவம் மிகுந்ததுமான சங்கடங்கள் அனைத்தையும் குறைக்ககுடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் அளவு கடந்த ஆற்றலையும்,ஆனந்தத்தை பெறலாம். ஓவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் வரம் […]
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நரேந்திர மோடி அரசு பக்தியுள்ள அரசு, என கருத்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நரேந்திர மோடி அரசு பக்தியுள்ள அரசு என்பதாலும், மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு அவசியம் என்பதாலும், அதனை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழக அரசு மட்டும் முயற்சி செய்தால் போதாது, என தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், இவ்விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் […]
பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும், கிறிஸ்தவ மக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒற்றுமை, அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கு வலிமை கூட்டும் சிறந்த நாள் என்பதை நம்புவதாக கூறியுள்ளார். இயேசு பிரானின் புனித எண்ணங்களும், கொள்கைகளும் சமுதாயத்திற்கு பல்வேறு நேர்மறை சேவைகளை செய்ய மக்களை ஊக்கப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். […]