வருகிற 17ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு நடைபெறுகிறது. மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான நிலைப்பாடு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பது, பல்லாயிரம் கோடிகளில் நடைபெறும் வங்கி மோசடிகள், பொருளாதார சரிவு போன்றவற்றால் பாஜக அரசு செல்வாக்கை இழந்து […]
மூன்று நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வசந்த உற்சவம் நிறைவடைந்தது. பால், தயிர் மற்றும் மூலிகை திரவியங்களால் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு, ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழக்கம் போல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நியுயார்க்கில் உள்ள ஐநா.சபை சார்பில் அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நீர்வளம் தொடர்பான மாநாட்டில் ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் உரை நிகழ்த்தினார். இந்தியாவில் காவிரி உள்ளிட்ட நதிகளுக்கு நீடிக்கும் ஆபத்தை அவர் சுட்டிக்காட்டினார். நதிகளைக் காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். அடுத்து வரும் தலைமுறைகளுக்கு பசுமையான வயல்களையும் பாய்ந்தோடும் ஆறுகளையும் அளிக்க வேண்டும் என்றும் ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உச்சநீதிமன்றம், மதுரை ஆதீன மடத்துக்கும், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கும் செல்வதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெகதலப் பிரதாபன் என்பவர் தொடுத்த வழக்கில் மதுரை ஆதீன மடத்துக்குள்ளும், ஆதீனத்துக்குச் சொந்தமான மற்றும் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள்ளும் நித்தியானந்தர் நுழையத் தடை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மதுரையில் தேவாலயம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, தேவாலயம் தாக்கப்பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார். அப்போது, மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் […]
இளம் பெண்களிடம் சேலத்தில் திருமண தோசம் கழிப்பதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வில்லங்க ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ஜோதிடர் போலீசில் சிக்கிய பின்னணி சேலம் மாவட்டம் கே.ஆர். தோப்பூரில் ஸ்ரீ அருள் தவசி ஜோதிடாலயா என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வந்தவர் பன்னீர் செல்வம்…! குமரன் குடில் என்ற பங்களா வீட்டில் பெண்களுக்கு திருமணம் தோசம் , பிள்ளை பேறு தோசம் கழிப்பதாக கூறி மந்திர […]
ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை புறநகர் வழியாக ரத யாத்திரை செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து இன்று நெல்லை வழியாக ரத யாத்திரை குமரி செல்ல உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்கத்தில் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று ரத யாத்திரை நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும், ராமராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற வலியுறுத்தி இந்து அமைப்பு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழியாக வந்து தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ராமநவமிக்கு ரத யாத்திரை நடத்துவோம் […]
தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவானது வருட வருடம் வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் […]
அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராமர் ரதம் தமிழக அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே 5 மாநிலங்களைக் கடந்து தமிழகத்தை வந்தடைந்தது. நேற்று தென்காசி வந்த அந்த ரதம், பின்னர் மதுரைக்கு வந்து சேர்ந்தது. இன்று ராமேஸ்வரத்தை வந்தடையும் ரதயாத்திரை, நாளை தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம் செல்ல உள்ளது. விஷ்வ இந்து பரிசத்தின் இந்த ரதயாத்திரை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடைபெறுகிறது. வழிநெடுக ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ராமர் ரதத்தை வரவேற்று தீப ஆராதனைகள் […]
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரத யாத்திரையுடன் இருசக்கர வாகனங்களில் வி.எச்.பி. அமைப்பினர் ஊர்வலம் வரக்கூடாது என வி.எச்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் வந்தால் ரத யாத்திரை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ரத யாத்திரை அனைத்து மாநிலங்களுக்கும் செல்கிறது, எந்த மாநிலத்திலும் ரத யாத்திரை தடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ரத யாத்திரைக்கும், முக்கிய இந்து அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் […]
144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்காதது எந்த வகையில் நியாயம்? என்றும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்வது கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் […]
ரத யாத்திரை தமிழகத்திற்கு தேவையில்லை, அதை உடனே நிறுத்த வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது […]
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி […]
ஹெச்.ராஜா விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரையை எதிர்ப்பது அப்பட்டமான இந்து விரோத செயலாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் ரத யாத்திரை தொடங்கியது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வந்த ரத்த யாத்திரை இன்று தமிழகத்துக்கு […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற […]
சென்னையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயர் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் மாரடைப்பு காரணமாக காலமானார். ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ள ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயரான அவருக்கு 83 வயதாகிறது. மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிற்பகல் 12.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சைத்ரா நவராத்திரி விழா வடமாநில நகரங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெருந்திரளாக பக்தர்கள் துர்க்கை அம்மன் கோவில்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் சைத்ரா நவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து குகைக்குள் கோவில் கொண்டுள்ள வைஷ்ணவ தேவியை வழிபட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சைத்ரா நவராத்திரி பண்டிகை வட மாநிலங்களில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. முதல் நாள் இரவான நேற்று பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அகண்ட ஜோதி ஏற்றப்பட்டு ஒன்பது நாட்களுக்கு அணையா விளக்காக ஒளிவீசும். இதனை முன்னிட்டு பெரும் திரளான பக்தர்கள் கோவிலுக்குத் திரண்டனர். காக்கும் தெய்வமான துர்க்கையை வணங்கி இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க, ஆடல், பாடல் பஜனை கீதங்களுடன் வழிபாடுகளை செய்தனர்.18ம் தேதி தொடங்கி 25ம் தேதி ராமநவமி அன்று இந்த விழா நிறைவு பெறுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]