தனது எதிரிகளை அழிப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமியார் நித்தியானந்தா, விசேஷ பூஜையில் ஈடுபட்டார். மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் நடைபெற்று வரும் நித்தியானந்தாவுக்கு எதிரான வழக்குகளும் அவருக்கு பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகின்றன. இப்படி பல்வேறு தரப்பிலும் அவருக்கு பாதகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தனது எதிரிகளை அழிக்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்ய […]
ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! “முருங்கு (Murungu) கடவுள்” என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது! தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்.
தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள கிராம தேவதை மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு 1008 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசங்களை வைத்து சலசாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டப கடைகளை பராமரிப்புக்காக திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி. ஒரு வாரத்திற்குள் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், வியாபாரம் செய்வதற்கு அனுமதி இல்லை . மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து புதுமண்டபத்தில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்காலத்தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்துசமய அறநிலையத்துறை மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் […]
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
இந்து அறநிலையத் துறையினரால் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ராஜ கோபுரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொடங்கிய கட்டடப் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 21 கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலின் ராஜகோபுரம் 220 அடி உயரம் கொண்டது. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இதனை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ராஜகோபுரத்திற்கு அருகில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கி குழிகள் தோண்டப்பட்டு கட்டுமானப் பொருட்களும் இறக்கப்பட்டன. ஆனால் இந்த […]
ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அதனதன் தீர்த்தத்தால் மகிமை உண்டு, பெருமை உண்டு. அவற்றில் நீராடுவோருக்குப் பல்வகையான நலன்கள் உண்டு. அந்தவகையிலான சில தலங்களை இங்கே தரிசிப்போம். 1. தலத்தின் பெயர்: திருக்கழுகுன்றம், இறைவன்: வேதகிரீஸ்வரர் (மலைமேல் திகழ்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் உள்ளவர்). இறைவி: சொக்கி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்) செங்கல்பட்டு-மகாபலிபுரம் வழியில் செங்கல்பட்டிலிருந்து 14 கி.மி. தொலைவு. கடற்கரைச் சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்திலிருந்து 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் […]
மேஷம்: இன்றைய நாளில் எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம்: இன்றைய நாளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சிரியா நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டி பணகுடியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையான புனித சூசையப்பர் திருத்தல பங்கைச் சேர்ந்த இறைமக்கள் சுமார் 500 பேர் தவக்கால புனித யாத்திரை சென்றனர்.
ஏழரை கிலோ எடை கொண்ட கட்சபேஸ்வரர் வெண்கலச் சிலை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் திருடு போனது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கி வரும் அந்தக் கோவிலில் கட்சபேஸ்வரர் சிவாச்சாரியர் சிலை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருடு போயுள்ளது. கோவில் நிர்வாகி தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குமரகோட்டம் முருகன் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதால் சிலையை திருடி சென்றவர்களை கண்டுபிடிப்பதில் […]
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்ற அவர், இமாச்சலப் பிரதேசத்தில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட அவர், இமயமலை சென்று நீண்டநாளாகிவிட்டதால், தற்போது அங்கு செல்வதாக தெரிவித்தார். பின்னர் சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குறைந்தபட்சம் 15 நாட்கள் இமயமலையில் தங்கியிருக்க உள்ளதாக கூறினார். இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்ற ரஜினிகாந்த் பைஜ்நாத் (Baijnath) என்ற இடத்தில் உள்ள பழமையான பைஜ்நாத் சிவாலயத்தில் வழிபாடு நடத்தினார். மேலும் செய்திகளுக்கு […]
இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் புறப்பட்ட அவர், சிம்லா சென்று அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார். இமயமலையில் அவர் 10 முதல் 15 நாட்கள் வரை தங்க திட்டமிட்டுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, அரசியல் இயக்கம் தொடங்க உள்ள நிலையில் செல்வதால் புதிதாக வேண்டுதல் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தேவனின் பாதையில் பயணிக்கும் 5 பேருக்கு புனிதர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். கிறித்துவம் தழைப்பதற்கான சேவையில் ஈடுபட்டு மனித உயிர்கள் மற்றும் உரிமைகளைக் காக்க அதிசயங்களை நிகழ்த்தியதை அங்கீகரித்து இந்த புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாட்டிகன் தெரிவித்துள்ளது. இதில் ஆறாம் போப் பால் மற்றும் ஆர்ச் பிஷப் ஆஸ்கர் ரோமெரோ ஆகியோரும் புனிதர் பட்டத்திற்கு வாட்டிகனின் அங்கீகாரம் பெற்றுள்ளனர். இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்தில் பிஷப்புகளின் சதஸ் […]
காவல்துறையினர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்தனர். காவல்துறைக்கு கோவில் அருகிலேயே நடைபெற்று வந்த இந்த சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து அப்பகுதியில் தீவிர சோதனை நடத்திய காவல்துறையினர், சங்கு விற்பனைக் கடை ஒன்றில் இருந்து 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடையின் உரிமையாளர் அன்புராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அன்புராஜ் பாம்பன் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையிலிருந்து […]
சென்னை உயர்நீதிமன்றம், மடாதிபதிகள், ஆதினங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அந்த மடத்தின் சொத்துக்களை கைப்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு.நித்தியானந்தாவுக்கு மதுரை ஆதின மடம் மற்றும் மடத்திற்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்துள்ளது. மடங்களில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றிருந்தால், அது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராமேஸ்வரம் கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடும்பத்தினருடன் வழிபட்டார். ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஆளுநரை கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதனையடுத்து கோவிலுக்குள் நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் ஆளுநர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் பிருந்தாவன் சாது விஜய்கோஷல் மஹாராஜ் ஆகியோர் சென்னையிலிருந்து சேதுவிரைவு ரயிலில் புறப்படடு ராமேஸ்வரம் சென்றடைந்தனர். ராமநாதபுரம்,திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் ஆளுனரின் வருகையொட்டி இருந்து 600க்கும் மேற்பட்ட […]
புனிதத் தலங்களான குருதுவாராவில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு சீக்கியர்களின் ஹோலா மொஹலா பண்டிகை கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது மதகுருவான குரு கோபிந்த் சிங், 18ம் நூற்றாண்டில் வண்ணங்கள் வீசும் ஹோலி நாளில்தான் , அவுரங்கசீப் உள்ளிட்டோரின் இஸ்லாமியர் படைகளை முறியடிக்க தனக்கான சீக்கியர்களின் ராணுவப் படையை அமைத்தார் என்று கூறப்படுகிறது. சீக்கியர்களின் புத்தாண்டும் இந்த நாளிலிருந்துதான் தொடங்குகிறது. இந்தப் புனித நாளை முன்னிட்டு வண்ண மயமான ஆடைகளுடன் ஏராளமான சீக்கியர்கள் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்குத் திரண்டனர். […]
இன்று காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரரின் உடல் அடக்கம் மடத்தின் பாரம்பரிய ஐதீக முறைப்படி நடைபெற்றது. 83 வயதான ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் அவரது உடல் காஞ்சி மடத்தில் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் உடல் கூடத்திற்கு கொண்டுவரப்ப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் […]
சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சங்கரமட பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 2016 இல் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. ஜெயேந்திர சரஸ்வதி வாழ்க்கைக் குறிப்பு: 1.1935 ஜூலை 18-ஆம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள […]
பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திரரின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் , செய்தியாளர் சந்திப்பின் போது கண்கலங்கினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கெடுதல் செய்தவர்களுக்கும் நல்லது நினைக்கும் வன்மம் இல்லாத பெரிய மகான் சங்கராச்சாரியார் என்று கூறி கண் கலங்கினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.