இன்று காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால் காலமானார். காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு வயது 83.சங்கரமடம் அருகே உள்ள சங்கரா மருத்துவமனையில் இன்று காலை அவர் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பொறுப்பாளர் நடன சாஸ்திரி ஜெயேந்திரர் காலமானதை உறுதிப்படுத்தினார். தகவல் அறிந்து சங்கர மடத்தின் அருகே பக்தர்கள் பொதுமக்கள் திரண்டதையடுத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயேந்திரரின் உடல் பொதுமக்கள் […]
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள விஸ்வநாதர் உலகம்மன் கோயிலில் மாசி திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவில் நேற்று நடந்த வானவேடிக்கையிலிருந்து வந்த தீப்பொறி ஒன்று கோயில் வளாகத்தில் பைரவர் சன்னதியின் பின்புறம் உள்ள மரம் ஒன்றில் விழுந்தது. உடனே அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை கேட்டு தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,தீயணைப்பு படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து வந்தனர்.பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் […]
‘தி சர்ச் ஆஃப் ஸ்பல்ச்சர்’ என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு புனித தளமாகும். இங்கு தான் கிறிஸ்துவ மதத்தினை தோற்றுவித்த புனித இயேசு அடக்கம்செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த தளம் தற்போது திடீர் என்று மூடப்பட்டு இருக்கிறது. இஸ்ரேலில் இருக்கும் அனைத்து சர்ச்சுகளுக்கு சொந்தமாக அதிக அளவிலான நிலம் இருக்கிறது. இந்த நிலங்கள் அனைத்தும் குத்தகைக்கு விடப்பட்டு, அதன்முலம் கிடைக்கும் வருவாயில் இருந்தே அந்த சர்ச்சுகள் எல்லாம் பராமரிக்கப்படுகிறது. இதற்கு எதிராக அங்கு உள்ள அரசானது நிலம் […]
அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தீவிபத்து நடந்த மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் ஆய்வு நடத்தினர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மீனாட்சி அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தீ விபத்து நடந்த கிழக்கு சுவாமி சன்னதி வாயிலை தவிர்த்து அனைத்து வாயில்கள் வழியாக பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலிலும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், இந்துசமய அறநிலையத்துறையினர், தொல்பொருள்துறையினர், தடயவியல் […]
இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். வேதம் ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அவைகள் எதுவும் உண்மையில்லை என்று வள்ளலார் வலியுறுத்தினார். இந்து சமயத்தில் பல மூட நம்பிக்கைகளுக்குக் காரணமாக […]
சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் 31ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜிஜி காலனி பகுதியில் உள்ள அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. நேற்று இக்கோவிலின் கும்பாபிசேகமானது நடைபெற்றது. அப்போது கோவில் கருவறையில் உள்ள அம்மன் சிலைகளை நகட்டும் போது 1835ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆங்கில அரசாங்கத்தின் பழைமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால் காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி […]
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பது பலமாகும். நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும்.அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண்பழி ஏற்படலாம். கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாகப் பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவி பரஸ்பரம் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்கள் சமையல் செய்யும் போது கவனம் […]
சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சுவாமிக்கு ஸ்டாலின், தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது, கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க […]
தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 1200 பழங்கால சிலைகளை கடத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 1992ல் இருந்து 2017 வரை இந்த கடத்தல் நடந்துள்ளதாக தெரிகின்றது. மேலும் இதில் 350 சிலைகளின் தகவல்கள் தெரியவில்லை என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 18 சிலைகளை கண்டுபிடித்ததாகவும் 50 சிலைகள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
ஆண்டல் சர்ச்சை தொடர்பாக அவரது வார்த்தைகள் திசை திருப்பிவிட்டதாக கவிஞர் வைராமுத்து கூறிய போதும், கடந்த இரண்டு நாட்களில் இதனால் அதிக முறைகேடு நடந்துள்ளது. நித்யானந்தா ஆசிரமத்தில் பயிலும் சிறுவர்கள் இந்த சர்ச்சை பற்றி அவதூறாக பேசி விடியோக்களை வெளியிட்டுள்ளனர். இது பொது மக்களிடையே கோபத்தை தோற்றுவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கர்நாடகா போலீஸுக்கு புகார் அளித்த பிரபல தொழிலதிபரும்,சமூக ஆர்வலருமான பியுஷ் மனூஷ், ‘பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். முக்கிய எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் பலர் ஆசிரமத்தின் […]
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு! ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து இராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தாமிரபரணி நதியில், அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள், தாமிரபரணியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அமாவாசை நாட்களில் […]
ஒளியே ஐயப்பன் ; ஒலியே ஐயப்பன்! விரதம் இருந்து, மாலையணிந்து, கருப்பு, காவி நிற ஆடைகளை அணிந்து, இருமுடி சுமந்து, மலையேறி, மணிகண்டனைத் தரிசித்து, மகரஜோதியையும் பார்த்தவர்கள், அன்றைக்கு 200 பேருக்கும் குறைவாகத்தான் இருந்தார்கள். அவர்கள், மகரஜோதியைத் தரிசித்ததை, மெய்சிலிர்க்க விவரிக்க, கேட்பர்கள் மெய்ம்மறந்து போவோம்! இன்றைக்கு அப்படியா? லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில், ஜோதி பார்க்கக் கூடுகிறார்கள். இந்த வருடமும் கட்டுக்கடங்காத கூட்டம். மலையளவு கூட்டம். அந்த மலையே நிறைந்திருக்கும் அளவுக்கு கூட்டம். அதுமட்டுமா? மகரஜோதி தரிசனத்தை, […]
இந்திய இந்து மத துறவி ஆன விவேகானந்தா1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர். இவரின் இயற் பெயர் நரேந்திரநாத் தாத்தா.இவர் இந்திய மாய ராமகிருஷ்ணாவின் தலைமை சீடராக இருந்தவர். பின்னர் தனது பெயரை ஸ்வாமி விவேகானந்தா என்று மாற்றி கொண்டார்1886ம் ஆண்டு ராமகிருஷ்ணரின் மறைவுக்கு பின்னர் விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் கோசப்பூர் கணிதத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.இவர் மேற்கத்திய உலகிற்கு வேதாந்த மற்றும் யோகாவின் இந்திய தத்துவங்களை அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். பின்பு 1897 மே மாதம் 1ம் தேதி அன்று […]
இயேசு கிறிஸ்து சிலுவையில் இறக்கவில்லை என்று இன்றும் பலர் நம்புகின்றனர். இயேசு தனது கடைசிக் காலத்தில் காஷ்மீரில் வாழ்ந்ததாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். பாலஸ்தீனத்தில் இருந்து தப்பியோடிய இயேசு, அவரது தாயார் மரியாளுடன் (இன்றைய) பாகிஸ்தானை வந்தடைந்தார். அங்கு சில காலம் வாழ்ந்திருக்கையில் மரியாள் மரணமுற்றார். பாகிஸ்தானில் இப்போதும் முரே (அல்லது மரீ?) என்ற பெயரில் கிராமம் ஒன்றுள்ளது. அங்கு மரியாள் புதைக்கப் பட்டதாக சொல்லப் படும் சமாதி ஒன்றுள்ளது. அதில் “அன்னை மரியாள் துயிலுமிடம்” […]
கன்னி ராசிக்காரர்களே ! இந்த வாரம் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாகப் பேசுவது நல்லது. தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் ஸ்தானத்தை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் வரும். […]
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும். அதிகக் கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க […]
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். தனாதிபதி சூரியன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது ஏழாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். மற்றவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்களிடம் பகை நீங்கும். வீண் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் […]
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் புதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் […]