இன்றைய (22.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் :
இன்று உங்களின் செயல்கள் அனைத்தையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். இன்றைய நாளில் ஆடை மற்றும்  ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம் : 
இன்று உங்களது  குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும் .பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும்,ஆனால் அதே சமயத்தில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
மிதுனம் : 
இன்று உங்களது  குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடலாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கடகம் : 
இன்றைய நாளில் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உங்கள் பணியில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.
சிம்மம் : 
இன்று உங்களது  குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கலாம்.
கன்னி : 
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும் நாள் ஆகும்.
துலாம் : 
இன்று நீங்கள் தேவையற்ற குழப்பங்களை  தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் செலவு  ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம் :
இன்று உங்களது உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும்.
தனுசு: 
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மகரம் : 
இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பதவியில்  மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம் : 
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் உண்டாகும். இன்று  வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
மீனம் :
இன்று  உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல  லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்