ஆடி பூரம் 2024 ல் எப்போது ? குழந்தை வரம் தரும் ஆடிப்பூரம் ..!

Published by
K Palaniammal

ஆடிப்பூரம் 2024 -ஆடிபூரத்தின் சிறப்புகள் மற்றும் வழிபடுவதற்கான சிறந்த நேரம் எது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆடிப்பூரத்தின் சிறப்புகள் ;

ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மாதம் தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரம் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. பூரம் என்ற சொல்லுக்கு முழுமை நிறைவு என்று பொருள். இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்த நாள் என புராணம் கூறுகிறது . மேலும் இன்றைய தினத்தில் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாள் அவதரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இந்நாளை ஆண்டாள் ஜெயந்தி என்றும் கொண்டாடுகின்றனர்.

சித்தர்களும் யோகிகளும் தவத்தை இந்நாளில் தான் துவங்குவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. இந்நாளில் ஆண்டாள் ஜெயந்தி அன்று ஸ்ரீ வில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் அம்மனுக்கு உரிய வளைகாப்பு திருவிழாவாகும் .இந்நாளில் பல கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழாக்கள் நடத்தப்படுகிறது.

தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனி சிறப்பு. மானுட பிறவியில்  கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல் இந்நாளில் அம்மனுக்கும் வளைகாப்பு நடத்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு வளையல்களை மாலை போல் அலங்கரித்து சிறப்பு அலங்காரம் செய்து வளைகாப்பு நடத்தப்படுகிறது.

திருமணம் வரம் வேண்டியவர்கள் மற்றும்  குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அம்மனுக்கு வளையல்களை வாங்கி கொடுக்கலாம். பிறகு வழிபாடு நடந்த பிறகு பிரசாதமாக பெண்களுக்கு  கொடுக்கப்படும் .இதை அணிந்து கொண்டால் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதன் பிறகு இரண்டு நெய் தீபங்களை அம்மன் சன்னதியில் ஏற்றி வழிபாடு செய்யவும் .

வீட்டில் வழிபடும் முறை;

பூஜை அறையை சுத்தம் செய்து அம்பிகையின் திரு உருவப்படத்தையும் சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். பிறகு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் அம்பிகையின் படத்திற்கு  வளையல்களை மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும்.

அதன் பிறகு சிகப்பு நிற பூக்களால் அலங்காரம் செய்து மங்களப் பொருட்களை வைத்து விளக்கேற்றி சர்க்கரை பொங்கல் அல்லது சர்க்கரை கலந்த பால் நெய்வேத்தியமாக வைத்து படைக்கலாம் .அதன்பின் அம்பிகைக்கு உரிய நாமங்களான அபிராமி அந்தாதி, திருப்பாவை,  போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்து பூஜைகளை முடிக்கலாம் .

ஆடிப்பூரம் 2024 -ல் எப்போது ?

இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை5;45 துவங்கி  ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை மாலை 8;30  மணிக்கு முடிவடைகிறது. ஆனால் ஆகஸ்ட் 7ஆம் தேதியே ஆடிபூரமாக  கொண்டாடப்பட உள்ளது. அதிலும் காலை 9 ;15 முதல் 10 ;15 மணி வரையிலும் பிறகு காலை 10:45 முதல் 11; 45 வரையிலும் வழிபாடுகளை மேற்கொள்ள சிறந்த நேரமாக கூறப்படுகிறது.

ஒரு செயலை முழுமை பெற செய்யக்கூடிய சக்தி ஆடிபுரத்திற்கு உள்ளது அதனால் நீங்கள் நடக்காது என நினைக்கும் காரியங்களை இந்நாளில் அம்மனை  மனம் உருக வேண்டி செய்து பாருங்கள் நிச்சயம் நிறைவேறும். அம்பாளின் அருளைப் பெற ஆடிப்புரத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago