நாளை அல்லது நாளை மறுநாள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, +2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்து முறையில் பெற்ற 20 சதவிகித […]
நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக,ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனினும், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக புதுச்சேரியில் வருகின்ற 16 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு முதற்கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி […]
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 19-7-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் படி,மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள் தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுநெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாகவே மாவட்ட ஆட்சியாளர்களிடம் […]
கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஜூலை 15 முதல் 8 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி மஹாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன,பின்னர்,9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து,ஜனவரி மாதம் முதல் 5 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.இதனையடுத்து,கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் […]
தமிழ்நாடு அரசு பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதில் ‘ஒன்றிய அரசு’ என இடம்பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் […]
செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது என்று தேசிய தேர்வு மையம் விளக்கமளித்துள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிவிப்பு பரவி வருகிறது.அத்தகைய அறிவிப்பு போலியானது மற்றும் மார்பிங் செய்யப்பட்டது.மேலும், மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தேசிய தேர்வு மையம் (என்.டி.ஏ) அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். JEE முதன்மை 2021 […]
தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் முதல் தவணையில் 40 சதவீதமும், 2 ம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், “கொரோனா இரண்டாவது […]
ஜே.இ.இ.(JEE) மூன்று மற்றும் நான்காம் கட்டத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜே.இ.இ.(JEE) மூன்றாம் கட்டத் தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரையும், நான்காம் கட்டத் தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையும் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “ஜே.இ.இ.யின் மூன்றாம் கட்டத் தேர்வுக்கு பதிவு செய்யாதவர்கள் […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமாகிய டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2020ம் ஆண்டுக்கான துறை தேர்வுகள் நடைபெற்றது. இதனை அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நேர்முக தேர்வு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஆகிய நிலையில், தற்போது இந்த தேர்வுகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், இரண்டு மற்றும் மூன்றாம் […]
நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மாணவி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த வகையில்,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றார். இதனையடுத்து, நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் […]
மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-II பதவிக்கான நேர்முகத் தேர்வானது வருகின்ற ஜூலை 19 ஆம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீண்ட கலாமாக காலியாக இருந்த 112 இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு 2018 ஜூன் 6-ம் தேதி நடந்தது. 2018 ஜூலை 15-ல் தேர்வு முடிவுகள் வெளியானது. 1,328 பேர் எழுதியதில் 33 பேர் மட்டும் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. […]
நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு காரணமாக இருந்துவிட்டு,தற்போது அதை எதிர்க்கும் திமுகவின் செயலை நினைத்தால்,ஒரு பக்கம் குழந்தையை கிள்ளி விட்டு மறுபக்கம் தொட்டிலை ஆட்டும் பழமொழி நினைவுக்கு வருகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் திமுக: ஒரு பக்கம் ‘நீட் தேர்வு’ என்பதற்கு மூலக் […]
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.இதனால்,சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண்கள்,முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் உள்மதிப்பீடு, இடைக்கால மற்றும் முன் வாரிய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண் முடிவுகளை தயாரிப்பதற்காக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் […]
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது 9 ஆம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு இன்று அரசானை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதனால்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவியது. இதனையடுத்து,தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பில் […]
தமிழகத்தில் கல்லூரிகளில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், இதன்காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனையடுத்து,இன்று கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை […]
குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் தலைமையில் கடந்த அக்டோபர் 17, 2019 அன்று ஆட்சேர்ப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில்,ஆந்திர பொதுச் சேவை ஆணையம் மூலம் குரூப் 1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வை தவிர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை கோரி, ஏபிபிஎஸ்சி […]
மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும்,கொரோனா பாதிப்பு தற்போது சற்று குறைந்து வரும் காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் ,பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில்,முதலாவதாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் […]
ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப நடைமுறைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி அவர்கள்,”அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டு மையம் […]
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா? இல்லையா ? என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும்,தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா? இல்லையா ? என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும் போது, […]
+2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் […]