நீங்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியா… நீதிமன்றத்தில் மாதம் 71,000 வரை சம்பளம்..!

job vacancy: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
அதன்படி முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை பணியாளர், நகல் வாசிப்பாளர், கட்டளை எழுத்தர், ஓட்டுனர், நகல் பரிசோதகர் , இரவு காவலர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென்/வாட்டர்வுமன் மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் உள்ளிட்ட 17 பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 01.07.2006க்குப் பிறகு பிறந்திருக்கக்கூடாது மற்றும் 01.07.2024 தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பணிகளுக்கும் 10-ம் வகுப்பு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒளிப்பட நகல் எடுப்பவர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு முன் அனுபவம் தேவைப்படுகிறது. விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தங்கள் மாவட்டங்களை தேர்வு செய்து அங்குள்ள உள்ள காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு உள்ளனர். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 27.05.2024-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025