அழைப்பு உங்களுக்கு தான்..! ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.! விவரம் இதோ…

Published by
மணிகண்டன்

மத்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அலுவலர் பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். 

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கிரேடு ‘பி’ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 291 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு :

கிரேடு -B (DR) பொது 222, காலிப்பணியிடங்கள்,  கிரேடு-B (DR)- DEPR  38 காலிப்பணியிடங்கள்,  கிரேடு-B (DR)-DSIM – 31 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான வயதுத் தகுதியானது விண்ணப்பதாரர் 01.05.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

கிரேடு0-B பொது பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். DEPR மற்றும் DSIM பிரிவுகளுக்கு கணிதம், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உள்ளன. அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். நேர்முக எழுத்து தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.rbi.org.in அல்லது ibpsonline.ibps.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதியானது 09.06.2023 ஆகும்.

விண்ணப்பக் கட்டணமானது பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

8 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

9 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

9 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

10 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

11 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

13 hours ago