ITI முடித்திருந்தால் மத்திய அரசு வேலை… உடனே விண்ணப்பியுங்கள்… விவரம் இதோ…

SPMCIL

மத்திய அரசின் SPMCIL துறையில் ஐடிஐ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் SPMCIL (Security Printing and Minting Corporation of India) பிரிவின் கீழ் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஐடிஐ (ITI) எனும் தொழிற்கல்வி படிப்பை முடித்து இருக்க வேண்டும். மேலும், அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

இதற்கு வரும் 15 ஜூன் 2023 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 15 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும், அலுவகக பணிகளுக்கு 28 வயதாகவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலிப்பணிகள் :

  • ஜூனியர் டெக்னீசியன்.
  • ஜூனியர் உதவி அலுவலர்.

காலியிடங்கள் :

  • ஜூனியர் டெக்னீசியன் – 56.
  • ஜூனியர் உதவி அலுவலர் (இரு பிரிவுகள்)- 8 (6+2).

கல்வித்தகுதி :

  • ஜூனியர் டெக்னீசியன் – ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
  • ஜூனியர் உதவி அலுவலர் – ஏதேனும் ஒரு டிகிரி முடித்து தட்டச்சு திறன் பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) : ரூ. 18,780/- முதல் ரூ.67,390/-

வயது வரம்பு (அதிகபட்சம்): 

  • ஜூனியர் டெக்னீசியன் – அதிகபட்ச வயது – 25.
  • ஜூனியர் உதவி அலுவலர் – அதிகபட்ச வயது – 28.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • கணினி வாயிலாக தகுதி தரவு நடத்தி மதிப்பெண் அடிப்படியில் வேலை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 15 ஜூன் 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15 ஜூலை 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  •  SPMCIL இன் அதிகாரபூர்வ தளமான spmcil.com க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் வெளியிப்படட்ட உரிய வேலைவாய்ப்பு லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பயனர்கள் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts