உடற்கல்வியில் அனுபவம் உள்ளதா ..? 30,000த்துடன் அரசாங்க வேலை உங்களுக்காக!

Published by
பால முருகன்

TNSCB ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்  சென்னை வடக்கு வட்டம் – II மற்றும் கிழக்கு வட்டம் – II ஆகியவற்றில் விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNSCB ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பதவி வாரியான காலியிட விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்துக்கொண்டு விருப்பம் இருந்தால் விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்…

காலியிடங்கள் விவரம் 

அறிவிப்பு எண்
பதவியின் பெயர் காலியிடங்கள் விண்ணப்பம் செய்ய கடைசி தேதி
222/2024 (வட வட்டம்-II)
விளையாட்டு பயிற்சியாளர்கள்
4 10.07.2024
405/2024 (கிழக்கு வட்டம்-III)
3 12.07.2024
மொத்தம் 7

சம்பளம் மற்றும் கல்வி தகுதி 

  • அனுபவத்துடன் உடற்கல்வி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தகுதி .
    பயிற்சி அனுபவம்: குறைந்தபட்சம் 1 வருடம் இருக்கவேண்டும்.
  • சம்பளம் மாதம் 30,000 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு 

  • 01.08.2024 தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 21 – 35க்குள் இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் மட்டும் தான் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்துகொள்ள முடியும்.

விண்ணப்பம் செய்யும் முறை 

  • இந்த வேலையில் சேர உங்களுக்கு ஆர்வமும், தகுதியும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tnscb.org க்குச் செல்லவும்.
  • பின், வடக்கு வட்டம்-II மற்றும் கிழக்கு வட்டம் -II இல் உள்ள விளையாட்டுப் பயிற்சியாளர்களின் பணிக்கான அறிவிப்பை கிளிக் செய்யவேண்டும்.
  • பிறகு இந்த வேலைக்கான விண்ணப்பம் படிவம் வரும் அந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • பிறகு அதில் கொடுக்கப்பட்ட விவரங்களை சரியாக ஒரு முறை படித்துக்கொண்டு தேவையான ஆவணங்களை வைத்து நிரப்பவேண்டும்.
  • நிரப்பிய பிறகு ஒரு முறை சரிபார்த்துவிட்டு கீழ் கண்ட முகவரிக்கு கடைசி தேதி அல்லது அதற்கு முந்திய தேதிக்குள் அனுப்பவேண்டும்.

முகவரி 

Superintending Engineer,
North Circle-ll,
Tamil Nadu Urban Habitat Development Board,
New No. 56 Old No. 140, Santhome High Road, Chennai – 600 004

முக்கிய விவரம் 

விண்ணப்ப படிவம் க்ளிக்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – க்ளிக்

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

30 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago