கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!

cheolostrol

கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உண்ணவேண்டிய உணவுகள் 

கொலஸ்ட்ரால் என்பது இரத்த ஓட்டத்தின் கொழுப்பு செல்களில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். ஆரோக்கியமான திசுக்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உங்கள் உடலுக்கு நல்ல கொழுப்பு (HDL) தேவைப்படுகிறது, ஆனால் இரத்தத்தில் உள்ள அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) கொழுப்பு படிவுகளாக மாறும், இது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

பொதுவாக நாம் நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது நமது உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் தற்போது இந்த பதிவில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க நாம் உட்கொள்ள வேண்டிய ஐந்து உணவுகள் பற்றி பார்ப்போம்.

இன்று, பர்கர்கள், பீட்சாக்கள், சிப்ஸ் மற்றும் சோடாக்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதியாக மாறிவிட்டன. நாம் அதிகம் விரும்பி உட்கொள்ளக்கூடிய பாஸ்ட்புட் உணவுகளால் நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.

கிரீன் டீ 

greentea
greentea [Imagesource : bbc]
கிரீன் டீ நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. கிரீன் டீ க்ரீன் டீயில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. ருபாலி தத்தாவின் கூற்றுப்படி, “கிரீன் டீயில் பாலிபினால்களின் அதிக செறிவு உள்ளது, இது கெட்ட கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சை 

lemon
lemon [Imagesource : TimesofIndia]
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை நச்சுகளை வெளியேற்றி உடல் பருமனை குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் பழங்களில் ஹெஸ்பெரிடின் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுவதை தடுப்பதோடு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

கீரைகள் 

spinach
spinach [Image Source : Timesofindia]
கீரையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நம்மில் பலரும் அடிக்கடி கீரையை சமைத்து சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கலாம். கீரை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, கீரையில் கரோட்டினாய்டுகள் உள்ளன, அவை உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

வால்நட்

waulnut
waulnut [Imagesource : Representative]
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில், வால்நட் நிறைந்த உணவை உண்பது எடையைக் குறைப்பதற்கும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அதிகமாக மீன், இறைச்சி, ஐஸ் கிரீம், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்