Beetrootmilkshake [Imagesource : Representative]
நம்முடைய அனைவரது வீடுகளிலும் பீட்ரூட்டை பயன்படுத்தி உணவு தயாரிப்பது உண்டு. பீட்ரூட்டை சாலட்கள், சூப்கள், சாம்பார், கூட்டு, இறைச்சி வகைகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற உணவுகளில் சேர்த்து சமைக்கலாம். பீட்ரூட்டில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது.
பீட்ரூட்டில், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், நைட்ரேட்டுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்கள் குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்துக்கள் உள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் பீட்ரூட்டை வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
Beetroot Milkshake செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இதனை அடுத்து வேக வைத்த பீட்ரூட்டை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் மீண்டும் மிக்ஸியில் பால் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அரைத்த பீட்ரூட்டை பாலில் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இப்போது சுவையான பீட்ரூட் மில்க் ஷேக் தயார்.
நாம் கடைகளில் விலை கொடுத்து மில்க் ஷேக் வாங்கி குடிப்பதை விட வீட்டிலேயே பீட்ரூட்டை வைத்து இவ்வாறு மில்க் ஷேக் செய்து குடிக்கும் போது அது சுவையாகவும் சுத்தமாகவும் இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…