Biryani : பிரியாணி பிரியரா நீங்கள்..? பிரியாணி சாப்பிட்ட பின் இதை சாப்பிட மறந்திராதீங்க..!

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் பிரியாணி பிரியர்களாக தான் இருக்கிறார்கள். பிரியாணி பொதுவாக அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள், பிரியாணியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரியாணி செரிமானமாக சற்று கடினமாக இருக்கும். அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பிரியாணி சுவையானது என்றாலும் அதனை அடிக்கடி சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
அப்படியா பிரியாணியை சாப்பிட்ட பின் சில வழிமுறைகளை கையாள்வது நல்லது. பிரியாணி சாப்பிட்ட பின், 200 மிலி தண்ணீரில், பாதி எலுமிச்சையை பிழிந்து விட்டு, பட்டை தூள் 2 கிராம், ஆப்பிள் சைடர் வினிகர் 1 ஸ்பூன் கலந்து குடிக்க வேண்டும், இந்த கலவையில் நார்சத்து அதிகமாக உள்ளது. எனவே இது கலோரிகளை கரைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
அதே சமயம் பிரியாணி சாப்பிட்ட பின் இரவு உணவில் வெறும் பழங்கள் அல்லது காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு உறங்கலாம். இது உங்களிடம் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைய உதவுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025