paal paniyaram
பால் பணியாரம் -இந்தக் கோடை விடுமுறையை தித்திப்போட கழிக்க பால் பணியாரம் செய்வது எப்படி என பார்ப்போம்.
முதலில் எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் பச்சரிசியை மூன்று முறை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். மாவு ,இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் சேர்த்து அரைக்கக் கூடாது.
இப்பொழுது தேங்காயையும் பால் எடுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இரு முறை பால் எடுத்தால் போதுமானது. பால் எடுத்த பிறகு சர்க்கரை உங்கள் இனிப்புக்கு தகுந்தவாறு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் தூளும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். அந்த எண்ணெயில் அரைத்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துப் போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும். பிறகு அந்த பொறித்த பணியாரங்களை மிதமான சூடு உள்ள தண்ணீரில் சேர்த்து கிளறிவிட்டு எடுத்து விடவும்.
அப்போதுதான் அதில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறும். இப்பொழுது அந்தப் பணியாரத்தை தேங்காய் பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் சுவையான பால் பணியாரம் தயாராகிவிடும்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…