,

வாக்கிங்கை விட சைக்கிளிங் சிறந்ததாம் ..!ஏன் தெரியுமா?

By

Cycling benefit -நடைபயிற்சி செய்வதை விட சைக்கிள் ஓட்டுவது எவ்வளவு நன்மை என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

சைக்கிள் என்றதும் நம்முடைய சிறு வயது தான் ஞாபகம் வரும். நம்மில் பலரும் முதன் முதலில் ஓட்டிய வாகனம் என்றால் அது சைக்கிள் தான். தற்போது பெருகிவரும் நாகரீக வாழ்க்கையின் காரணமாக சைக்கிளை மறந்து விட்டோம். என்னதான் நடை பயிற்சி போன்ற பல உடற்பயிற்சிகளை செய்தாலும் சைக்கிளிங் செய்வதற்கு ஈடாகாது அந்த அளவிற்கு நன்மை உள்ளது.

சைக்கிள் ஓட்டுவதன்  நன்மைகள்:

தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதால் இருதயம் நலமுடன் இருக்கும். ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

மன அழுத்தத்தை குறைக்கவும் சைக்கிள் முக்கிய பங்கு வைக்கிறது. ஏனென்றால் இயற்கையோடு ஒன்றிணைந்து ஓட்டும் போது மனம் மகிழ்ச்சி அடையும் .இதனால் டோபமைன் என்ற ஹார்மோன்  மூளையில் அதிக அளவு சுரக்கும். இந்த ஹார்மோன் மன அழுத்தத்தை அதிகரிக்கக் கூடிய கார்டிசோல்  ஹார்மோனை கட்டுப்படுத்தும் .இது போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதையும் குறைக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாக்கிங் செல்வதால் பெரிதாய் நன்மைகள் கிடைப்பதில்லை ஆனால் சைக்கிள் ஓட்டும் போது தேவையற்ற கலோரிகள் கரைக்கப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படும் நாளடைவில் இன்சுலின் சுரப்பும் சீராக்கப்படுகிறது.

சைக்கிள் ஓட்டும் போது கை, கால் ,இடுப்பு பகுதிகள் ஒரே நேரத்தில் இயக்கப்படுகிறது இதனால் அந்தப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் எரிக்கபட்டு  உடல் எடையும் குறைக்கப்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது சைக்கிள் ஓட்டினாலே போதும் கணிசமாக எடை குறையும்.

ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறு உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டுவது மிக நல்லது. இதனால் வெளியில் உள்ள ஆக்சிஜன் இழுக்கப்பட்டு உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைத்து விடும். மேலும் இதனால் நுரையீரல் பலம் பெறும் . சைக்கிள் ஓட்டும் போது அதிக வியர்வை வெளியேற்றப்படுகிறது இந்த வியர்வை மூலம் கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது.

சைக்கிளிங் செய்யும் போது பெடலிங்  அதிகமாக செய்வதால் கால் மூட்டுகள் வலுபெறும். இதனால் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் மூட்டு வலி வருவது தடுக்கப்படும். எலும்புகளின் இணைப்பு திசுக்கள் சீராக இயங்கவும் உதவுகிறது.

இயற்கையான சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுவதால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் .மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக சென்று அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல ஆழ்ந்த தூக்கத்தையும் கொடுக்கும்.

கேன்சர் வர காரணமாக இருப்பது உடலில் கழிவுகள் தங்குவதும் ப்ரீ ரேடிக்கல்ஸ் செல்களின் அளவு அதிகமாக இருப்பதும் தான். சைக்கிள் ஓட்டும் போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு மெட்டபாலிசம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை ,ப்ராஸ்டேட்  புற்றுநோய் போன்றவை வருவது  தடுக்கப்படுகிறது.

சைக்கிள் ஓட்டுவதால் ஆயுள் கூடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றது. எனவே நடை பயிற்சியை  காட்டிலும் சைக்கிள் ஓட்டுவது தான் சிறந்தது.

Dinasuvadu Media @2023