லைஃப்ஸ்டைல்

அடடே! ஒவ்வொரு வாழைப்பழத்திலும் இவ்வளவு விஷயம் இருக்கா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

Published by
K Palaniammal

பழங்கள் என்றாலே ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என பலரும் நினைக்கிறார்கள், ஆனால் நம்ம ஊரில் மிகச்சிறந்த பழம் வாழைப்பழம். அதிலும் இலை முதல் தோல் வரை பயன்கள் உள்ளது .வாழைப்பழத்தில்  பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது அதன் பலன்களும் நிறையவே உள்ளது அதைப்பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்…..

பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டசியம் மெக்னீசியம், போன்ற தாது சத்துக்களும், விட்டமின் பி6 விட்டமின் சி பயோடின் அதிகம் உள்ளது. இந்த பயோட்டின் சத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.வாழைப்பழம் மூளைக்கு ஒரு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும். குறிப்பாக மூளையை அமைதிப்படுத்தி மகிழ்ச்சி அடையச் செய்யும் சேரடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது இந்த வாழைப்பழம்.

Banana Snack : வாழைப்பழத்தை வச்சி இப்படி கூட ஒரு டிஸ் பண்ணலாமா? செஞ்சி பாருங்க டேஸ்ட் அள்ளும்!

ட்ரிபிட்டோப்பேன் என்ற ஹார்மோன் மூளையை ஊக்கப்படுத்த கூடியது இந்த சுரப்பி சுரப்பதற்கு வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும் சக்தி பெற்றது. பசியை போக்கக்கூடிய தன்மையும் வாழைப்பழத்தில் உள்ளது. எலும்புகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கக் கூடியது.

பச்சை வாழைப்பழம்:

குடல் புண்ணை ஆற்றக்கூடிய சக்தி இந்த பலத்திற்கு உள்ளது. மேலும் பல் வளர்ச்சிக்கு சிறந்தது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

கற்பூரவள்ளி பழம் :

இந்தப் பழம் மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

ரஸ்தாலி பழம்:

சுவை அதிகமாக இருக்கும். மஞ்சள் காமாலை வராமல் பாதுகாக்கும். இதயத்தை பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.

நேந்துரபழம்  :
இது பொதுவாக கேரளா மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் அதிகமாக காணப்படும். குடல் புழுக்களை அளிக்கக்கூடிய தன்மை இந்த பழத்திற்கு உள்ளது. அதிக இரும்பு சத்து கொண்டது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.

செவ்வாழை பழம்:
இந்த பழத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவு சுண்ணாம்பு சத்து உள்ளது. தோல் நோய், கல்லீரல் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். குழந்தை பேரு இல்லாதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த பழத்தை தம்பதிகள் இருவரும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் குதிகால் வலிஉள்ளவர்கள் சாப்பிட்டு வர வலி குணமாகும்.

நாட்டு வாழைப்பழம்:
இந்தப் பழம் தென் மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும். ரத்த மூல நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும். மலச்சிக்கல் தொந்தரவு உள்ளவர்களும் சாப்பிட்டு வரலாம்.

சிறு மலைப்பழம் :

இது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும். அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்டது. பொதுவாக வாழைப்பழம் ஒரு சிலருக்கு சளி தொந்தரவை ஏற்படுத்தும் ஆனால் இந்தப் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்காது. ஆகவே நம் நாட்டு பழங்கள் விலை மலிவாகவே கிடைக்கின்றன.

Toast : இந்த 3 பொருட்கள் இருந்தா போதும்..! அசத்தலான முட்டை வாழைப்பழம் டோஸ்ட் ரெடி..!

ஆனால், நாம் தான் எளிதாக கிடைக்கக்கூடிய எந்த ஒரு பொருளையுமே குறைவாகத்தான் மதிப்பிடுவோம். அவ்வாறு இல்லாமல் நாம் நாட்டு பழங்களை அதிலும் குறிப்பாக மிகவும் விலை மலிவான இந்த வாழைப்பழத்தை தினமும் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டு பயன் பெறுவோம்.

Published by
K Palaniammal

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

55 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

13 hours ago