லைஃப்ஸ்டைல்

Paruppu Sadam : உங்க குழந்தைங்க சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இந்த பருப்பு சாதம் போதும் தட்டே காலி ஆகிடும்!

Published by
பால முருகன்

பொதுவாகவே நம்மளுடைய குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பது உண்டு . அதிலும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் அடம்பிடித்தால் அவர்களை சாப்பிட வைக்கவேண்டும் என்றால் அதற்கே  நேரம் ஆகிவிடும். அப்படி உங்கள் குழந்தைகள் அடம்பிடித்தால் அவர்களுக்கு சாப்பாடு ஊட்டுவது  என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும்.

ஆனால் இனிமேல் நீங்கள் அப்படி கஷ்டப்படவே தேவை இல்லை. ஏனென்றால், நாங்கள் சொல்ல போகும் பருப்பு சாதத்தை உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் காலையிலே செய்துகொடுத்தால் போதும் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விட்டு சமத்தாக பள்ளிக்கு செல்வார்கள்.

பருப்பு சாதம் 

பருப்பு சாதம் என்றவுடன் வழக்கமாக ஒரு வாரத்தில் இரண்டு முறை இதைத்தான் தங்களுடைய குழந்தைகளுக்கு செய்து கொடுக்கிறோமே என்று உங்களுடைய மனதில் எண்ணம் வருவது எங்களுக்கு தெரிகிறது.  ஆனால், நாம் இங்கு பார்க்கப்போகும்  பருப்பு சாதம் இதுவரை இல்லாத வகையில் சற்று வித்தியாசமாக உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தவையாக இருக்கும்.  அப்படி என்ன பருப்பு சாதம் என்பதை பார்க்கலாம் .

தேவையான பொருட்கள் 

  • குழைந்த சாதம் தேவையான அளவு
  • பருப்பு
  • பூண்டு
  • கேரட்
  • சீரகம்
  • நெய்

செய்முறை 

முதலில் நீங்கள் வெறும் சாதத்தை தேவையான அளவிற்கு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு குழைந்த சாதம் என்றால் பிடிக்கும் எனவே அந்த மாதிரி நீங்கள் குழைந்த சாதம் தயார் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்.  பிறகு குழந்தைகளுக்கு பருப்பு சாதம் பிடிக்க வேண்டும் என்றால் பருப்பை நீங்கள் வேக வைக்கும் போது 5 பூண்டு பற்கள்,  தேவையான அளவிற்கு மஞ்சள் தூள்,  தேவையான அளவிற்கு பெருங்காயத்தூள், ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

பிறகு வெறும் சாதத்தில் தேவையான அளவிற்கு உப்பை சேர்த்துக்கொண்டு வேக வைத்திருக்கும் பருப்பு கலவையை நீங்கள் வெறும் சாதத்துடன் சேர்த்து பொங்கல் பதத்திற்கு பிசைந்து கொள்ளவேண்டும். பின், சிறிதளவு சீரகத்தை நெய்யில் வறுத்து அதனை பிசைந்து வைத்த சாதத்துடன் சேர்க்கவேண்டும். சற்று காரமாக இருக்கவேண்டும் என்றால் வெள்ளை மிளகு தூள் நீங்கள் இதில் சேர்க்கலாம் கருப்பு மிளாகாய் தூள் இருந்தாலும் கூட சேர்க்கலாம்.

வெள்ளை மிளகு தூள் சேர்ப்பதால்  வழக்கமாக இருக்கும்  சுவையை விட சற்று சுவை இன்னும் அதிகமாக இருக்கும். அனைத்தையும் சேர்ந்து பிசைந்து கொள்ளவேண்டும். அதன்பின் சிறிது கொத்தமல்லி எடுத்து தூவிவிட்டு இறக்கி உங்களுடைய குழந்தைகளுக்கு  கொடுத்தால் விரும்பி சாப்பிட்டு அடுத்த நாளும் பருப்பு சாதம் வேண்டும் என்று கேட்பார்கள். இந்த பருப்பு சாதத்துடன் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பொரியலை சேர்த்தும் கொடுக்கலாம்.

இதையும் படியுங்களேன்- Banana Snacks : இந்த ரெண்டு பொருள் போதும்..! குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ஸ்நாக்ஸ் ரெடி..!

Published by
பால முருகன்

Recent Posts

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

18 minutes ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

1 hour ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

2 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

3 hours ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

3 hours ago