உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? அப்போ இந்த பதிவ படிங்க..!

Published by
K Palaniammal

Oily skin-நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும், அதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அதிக சரும பிரச்சனையால்  பாதிக்கப்படுவார்கள் ,மற்ற சருமங்களை விட இவர்களுக்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டும் . அதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய்  சருமத்தால் உள்ள நன்மைகள்:

  • ஆயில் ஸ்கின்  இருப்பவர்களுக்கு முகம் விரைவில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும் ஏனென்றால் இயற்கையாகவே அவர்களுக்கு சர்மம் ஈரப்பதமாக இருக்கும் இது ஒரு வரப் பிரசாதம் கூட கூறலாம்.
  • ஆனால் இந்த சருமம்  உள்ளவர்களுக்கு அதிக நேரம் மேக்கப் நிற்காது . குளித்த  சிறிது நேரத்திலேயே எண்ணெய்  வடிந்தது போல் இருக்கும் மேலும் முகப்பரு,கரும்புள்ளி  அதிகமாக வரும்.

எண்ணெய் பசையை கட்டுக்குள் வைக்க குறிப்புகள்:

  • சுடு தண்ணீர் மற்றும் மிகக் குளிர்ந்த நீரை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளான ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும் .இதனால் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும். மேலும் சரும துளைகளையும் ஏற்படுத்தும்.
  • எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • தினமும் எண்ணெய்  இல்லாத மாய்சராய்ஸ்களை முகத்திற்கு  பயன்படுத்த வேண்டும்.
  • எண்ணெய்  சருமத்திற்கு முல்தானி மட்டி ஒரு சிறந்த ஃபேஸ் பேக் ஆகும். வாரத்தில் மூன்று நாள் ஆவது முல்தானிமட்டி, பச்சைப்பயிறு போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் உங்கள் முக அழகை மிளிரச் செய்யலாம் .

எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்த ஃபேஸ் பேக்:

  • முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இது அதிகப்படியான எண்ணெய்  சுரப்பதை கட்டுக்குள் வைக்கும்.
  • ஓட்ஸ் 2 ஸ்பூன், தேன் இரண்டு ஸ்பூன் ,லெமன் ஒரு ஸ்பூன் இவற்றை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
  • கற்றாழை ஜெல்லை  நன்கு கழிவு விட்டு முகத்தில் பயன்படுத்தி வரலாம். இது சிறந்த இயற்கையான மாய்சரைஸராகவும்  அதிக எண்ணெய்பசையை கட்டுக்குள்  வைக்கும்.

எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்தக் குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் சர்ம அழகை மிளிரச் செய்யுங்கள்.

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago