உங்க குழந்தைகள் கத்திரிக்காய் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அப்போ இதை செஞ்சு கொடுங்க!

Aubergine

ஒரு சிலருக்கு கத்தரிக்காய் பார்த்தாலே பிடிக்காது குறிப்பாக குழந்தைகளுக்கு. கத்தரிக்காயை சாம்பாரிலோ அல்லது பொரியல் இல்லை போட்டால் அதை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அதனால் கத்தரிக்காயின் சத்துக்கள் நம் உடலில் கிடைக்காமல் போய்விடும். இந்த முறையில் செய்து கொடுத்தால் கத்தரிக்காயை ஒதுக்க முடியாது. மேலும் அதன் சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும். கத்திரிக்காயை நாம் சாம்பார் மற்றும் பொரியல் கத்திரிக்காய் கடையல் போன்ற வகைகளில் செய்து ருசித்திருப்போம். ஆனால் இன்று நாம் கத்தரிக்காயை வைத்து சட்னி செய்யும் முறையை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய்=5
வெங்காயம்=2
தக்காளி=2
கத்திரிக்காய்=3
துருவியதேங்காய் =4ஸ்பூன்
கொத்தமல்லி இலை= ஒரு கைப்பிடி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வர மிளகாய் வறுத்தெடுக்கவும். அதே எண்ணெயில் வெங்காயம் பொன்னிறமாக வதக்கி அதிலே கத்தரிக்காயையும் சேர்த்து பாதி வந்ததும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கும்போது கத்தரிக்காயும் முழுமையாக வதங்கி விடும். பிறகு கொத்தமல்லி இலையும் தேங்காயையும் ஒரு அரை நிமிடம் வதக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுவைக்காக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த சட்னியை சேர்க்கவும். இப்போது சத்தான கத்திரிக்காய் சட்னி ரெடி. இதை நாம் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடலாம்.

நன்மைகள்:

  • கத்திரிக்காய்க்கு உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை அதிகம் உள்ளது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளலாம்.மாரடைப்பு வராமலும் தடுக்கிறது.
  • மேலும் இது சுவாச பிரச்சனையை சரி செய்யும் நுரையீரலில் கிருமிகளை சுத்தம் செய்யும்.
  • சிறுநீர் கற்களையும் கரைக்கும் தன்மையும் கொண்டுள்ளது. நம் உடம்பில் உள்ள டாக்ஸிங்களை எளிதில் வெளியேற்றக் கூடிய தன்மையை பெற்றுள்ளது.
  • குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலையும் கொடுக்கிறது.
  • கல்லீரலை புதுப்பிக்கவும் தன்மையும் கொண்டுள்ளது. மேலும் செல்களை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.
  • மூலநோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்துக் வைத்துக் கொள்கிறது.
  • புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையும் கொண்டுள்ளது.
  • புகையிலை பழக்கத்திலிருந்து வெளிவர நினைப்பவர்கள் கத்தரிக்காயை தினமும் உணவில் சேர்த்து வரலாம். ஏனென்றால் இயற்கை முறையில் நிக்கோட்டின் இதில் காணப்படுகிறது. உடனே புகையிலை பழக்கத்திலிருந்து நிறுத்தினால் கை கால் நடுக்கம் போன்றவை ஏற்படும். அதற்கு மாற்றாக கத்தரிக்காயை தினமும் நாம் எடுத்துக் கொண்டால் அதில் உள்ள நிக்கோட்டின் சரி செய்யும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :

  1. சொறி,படை, தோல் நமைச்சல், அரிப்பு போன்ற தோல்நோய் பிரச்சனை உள்ளவர்கள்
  2. கத்திரிக்காயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
  3. சிசேரியன் செய்தவர்கள் முதல் ஆறு மாதத்திற்கு கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் இது அரிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
  4. கத்திரிக்காய் அதிகம் நாம் எடுத்துக் கொள்ளும் போது உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தும்.
  5. எனவே நாம் கத்தரிக்காய் அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்