ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு – ஐகோர்ட்டில் நாளை விசாரணை!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்துள்ளார்.
எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ஐகோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதன்பின் நீதிமன்ற தொடர் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தியிருந்தனர்.
பின்னர் அமலாக்கத்துறை காவல் முடிந்து, மீண்டும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்பின் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரும் வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறையும் வாதிட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற பின், கடந்த சில நாட்கள் முன் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதது. இந்த நிலையில், ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிட்டதால், ஜாமீன் தொடர்பான வழக்கு மீது நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025