அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை விரும்பி உண்பதுண்டு. அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்ற உணவுகளில் ஒன்று அச்சு முறுக்கு.
தற்போது இந்த பதிவில், சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ஐ.ஆர்.20 அரிசி – அரை கிலோ
- உளுந்தம் பருப்பு – 125 கிராம்
- டாலடா – 500 கிராம்
- உப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் புழுங்கல் அரிசியை ஊற வைத்து கிரைண்டரில் மழுமழுப்பாக ஆட்டிக் கொள்ள வேண்டும். தோசை மாவு பதத்தில் எடுக்க வேண்டும். பின் உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து மிக்சியில் பவுடராக அரைத்து சல்லடையில் சலித்து கொள்ள வேண்டும்.
பின் இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் டால்டாவை ஊற்றி காய வைத்துக் கொள்ள வேண்டும். முறுக்கு அச்சியில் மாவை வைத்து பிழிய வேண்டும். நன்கு சிவக்க வெந்ததும் எடுத்து தட்டில் போட வேண்டும். இப்பொது சுவையான அச்சு முறுக்கு தயார்.