பாகுபலி படத்தை போல பிரபாஸின் சாஹோ படமும் ஆண்ட்ராய்டு கேமாக உருவாக உள்ளது!

பிரமாண்ட படமான பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக சாஹோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான கார் சேசிங், ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.
இப்பட ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சாஹோ எனும் ஆண்ட்ராய்டு கேம் உருவாகி வருகிறது. விரைவில் இந்த கேம் பயன்பாட்டுக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. பிக்ஸலாட் எனும் நிறுவனம் இதனை உருவாக்கி வருகிறது.