நீங்கள் காஷ்மீரி தேநீர் (கஹ்வா) அருந்தியதுண்டா..? அந்த தேநீரில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா..?

kashmiritea

காஷ்மீரி  தேநீரிலுள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். 

நம்மில் குழந்தைகள் முதல் முஅத்தியவர்கள் வரை அனைவருமே தேநீர் என்றால் விரும்பி அருந்துவதுண்டு. பலர் தங்களது நாளை தேநீரோடு தான் தொடங்குவதுண்டு. தற்போது இந்த பதிவில் காஷ்மீரி  தேநீரிலுள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

கஹ்வா என்பது ஒரு பாரம்பரிய காஷ்மீரி தேநீர் ஆகும், இது ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. காவா டீயானது, பாதாம், செர்ரி பிஸ்தா அல்லது முந்திரி பருப்பு போன்ற நறுக்கப்பட்ட மற்றும் தூவப்பட்ட உலர் பழங்களுடன் பரிமாறப்படுகிறது.

கலோரிகளைக் குறைக்கிறது:

calories
calories [Imagesource : representative]
கஹ்வா தேநீர் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த தேநீரை அருந்தலாம். ஒரு கப் கஹ்வா தேநீர் பருகுவது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

செரிமான பிரச்னை 

digestive
digestive [imagesource : Representative]
இன்று பெரும்பாலானோருக்கு செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. செரிமானம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு இந தேநீர் ஒரு நல்ல மருந்தாகும். தேநீர் செரிமான அமைப்பை சரியான முறையில் இயங்க உதவியாக இருக்கும். இதனால் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும். மேலும், இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் மற்றும் வயிற்று குடல்களை சுத்தப்படுத்துகிறது.

மனஅழுத்தம் 

கஹ்வா டீயில் உள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்களை நிதானமாக வைத்திருக்கவும், பதட்டத்தை போக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள மன அழுத்தம் தொடர்பான நச்சுக்களை அகற்றவும் இது உதவியாக இருக்கும். எனவே, இந்த தேநீரை நீங்கள் சிறிதளவு பருகினால், அது உங்கள் மனதை மெதுவாக அமைதிப்படுத்தும்.

stress
stress [Imagesource : Representative]
நீங்கள் சலிப்பாகவோ அல்லது செயலற்றதாகவோ அல்லது தூக்கமாகவோ உணரும்போது, ஒரு கப் கஹ்வா டீயைக் குடித்துவிட்டு, செயல்பட்டால் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதைஉணர முடியும்.

ஆரோக்கியமான சருமம் 

facebeauty
facebeauty [Imagesource – Representative]
கஹ்வா தேயிலை ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது, இது முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தோல் வறட்சியைக் குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.  நீங்கள் தேநீரில் சில நொறுக்கப்பட்ட பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளை தூவி நன்கு கலக்க வேண்டும்.  இவ்வாறு அருந்துவதால், ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்