drinking water
Drinking water-காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
தண்ணீர் என்பது பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான ஒன்று. இந்த தண்ணீரை நாம் வெறும் வயிற்றில் குடிக்கும்போது பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் காலையிலேயே பல் கூட துலக்காமல் தண்ணீரை குடிப்பார்களாம் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாள் முழுவதும் அவர்கள் சோர்வடையாமல் இருக்கிறார்கள்.
ஒரு கிளாஸ் காலையிலேயே தண்ணீர் குடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே நமது உடல் மல கழிவுகளை நீக்கி உடலை சுத்தம் செய்து விடும்.மலச்சிக்கல் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.
உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறி புத்துணர்ச்சியாக இருக்கும். இதனால் பசி தூண்டப்படும், மேலும் நம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறுஞ்ச ஏதுவாகவும் இருக்கும்.
நீர்ச்சத்து குறைந்து விட்டாலே தலைவலி ஏற்படும். இப்படி தலைவலி தொந்தரவு இருப்பவர்கள் அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் விரைவில் தலைவலி வராமல் காத்துக் கொள்ளவும்.
வயிற்றில் உள்ள அதிக படியான அமிலத்தன்மையை குறைத்து அல்சர் புண் வராமல் பாதுகாக்கும். மேலும் உடலில் 24 சதவீதம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.
நம் உடல் 70 சதவீதம் நீரால் ஆனது தான், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
நம் குடல் சுத்தம் இல்லை என்றால் முகப்பரு ,மங்கு ,கருமை போன்று தோன்றும். இதனால் நம் முக அழகே கெட்டுவிடும். இவற்றை தடுக்க தினமும் காலையில் தண்ணீர் குடித்து விட்டோம் என்றால் நாளடைவில் முகம் அழகாக மாறும், பருக்கள் ஏற்படாமலும் பாதுகாப்பும்.
நம் உடலில் நிணநீர் மண்டலத்தை வலுவடைய செய்யும் ,இந்த நிணநீர் மண்டலம் தசை, நாளம், உறுப்புகளை ஒன்றிணைத்து செயல்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஒரு சிலருக்கு தண்ணீர் காலையிலே குடித்தால் வாந்தி ஏற்படும். இது குறிப்பாக உடலில் பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த நிலை வரலாம். இதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது .தொடர்ந்து குடிக்கும் போது நம் உடலில் உள்ள பித்தம் வெளியேறி நாளடைவில் வாந்தி ஏற்படுவது நின்றுவிடும்.
ஆகவே நம் எல்லோருக்குமே அழகாகவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் ஆசைப்படுவோம் .இதற்கு தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்து வந்தாலே போதும் .
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…