தயிர் வெங்காய பச்சடியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Published by
K Palaniammal

வெங்காயம் -தயிர் வெங்காய பச்சடியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

பிரியாணிக்கு கச்சிதமான ஒரு காம்பினேஷன் என்றால் அது வெங்காய பச்சடி தான். வெங்காயத்தை பச்சையாக எடுத்துக் கொண்டால் அது பல ஆரோக்கிய நன்மைகளை தரும். அதுவும் தயிருடன் எடுத்துக் கொள்ளும் போது  எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

குறிப்பாக முடி உதிர்வு பிரச்சனைக்கு வெங்காயம் முக்கிய பொருளாக கூறப்படுவது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அதை பச்சையாக எடுத்துக் கொண்டால் மற்றவர்களிடம் பேசும் போது வெங்காய வாடை  வரும்.

இதனால் பலரும் வெங்காயத்தை பச்சையாக எடுத்துக் கொள்வதில்லை ஆனால் தயிருடன் சாப்பிடும்போது வெங்காய வாடை  அந்த அளவுக்கு வருவதில்லை இதனால் உடல் ஆரோக்கியமும் பெறும்.

வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்:

வெங்காயத்தில் கால்சியம் ,இரும்புச்சத்து ,பாஸ்பரஸ், சிங்க் ,விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் பி5, விட்டமின் பி12 ,அயோடின், போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. குறிப்பாக சல்பர் வெங்காயத்தில் அதிகம் உள்ளது.

இந்த சல்பர் தான் வெங்காயத்தால்  ஏற்படும் கண் எரிச்சலுக்கு காரணமாகிறது. வெங்காயத்தை சமைத்து உட்கொள்ளும் போது அதில் உள்ள சத்துக்கள் 50% தான் நம்மால் பெற முடியும். ஆனால் பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது அதன் முழு பலனையும் பெற முடியும்.

பச்சை வெங்காயத்தின் பயன்கள்:

வெங்காயம் ரத்தம் உறைவதை தடுக்கும் தன்மை  கொண்டது. மேலும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசராய்டு அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதய அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.

குழந்தை பேரு இல்லாத தம்பதிகள் தினமும் காலையில் பத்து சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர வேண்டும் .இதனால் கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகள் சுத்தமாகி விரைவில் கரு தங்கும்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலகட்டம் மிகச் சிரமமானது .அந்த கடினமான பிரச்சனையை கூட எளிதாக்கி கொடுக்கும்.

அடிக்கடி நோய்வாய்ப் படுபவர்கள் இந்த பச்சை வெங்காயத்தை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இது ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி   இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்டது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தயிர் வெங்காய  பச்சடி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது .அதனால் அதை மதிய வேளையில் உட்கொள்வது சிறந்தது, மேலும் கார உணவுகளை உட்கொள்ளும் போது தயிர் வெங்காயம் எடுத்துக் கொண்டால் அதன் காரத்தன்மை குறைவாக இருக்கும்.

தயிர் வெங்காய பச்சடியுடன் துருவியை கேரட் சிறிதளவு சேர்த்து கொண்டால்  மேலும் எண்ணற்ற நலன்களை பெற முடியும்.

Recent Posts

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

15 minutes ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

40 minutes ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

1 hour ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

4 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

4 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

6 hours ago