ஞாபக சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள் எது தெரியுமா ?

memory power 1

Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம்.

வால் நட்ஸ்;

இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது மறதியை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதோடு மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

அதுமட்டுமில்லாமல் அல்சீமர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். டி எச் ஏ வளரும் குழந்தைகளுக்கும்  கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் நல்லது .

மீன்;

நல்ல கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. மூளைக்கு ஒமேகா 3 புதிய நரம்புகள் உருவாவதற்கும் மூளை சரியாக செயல்படுவதற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

முட்டை;

மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி6 பி 12 மற்றும் கோளின் சத்து நிறைந்து இருக்கு .இது மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

பூசணி விதைகள் ;

இது ஒரு ஞாபக சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடம்பில் உருவாகக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ் நச்சு கழிவுகளை போராடி வெளியேற்றும் .பூசணி விதைகளில் இரும்புச்சத்து ,சிங்க் காப்பர் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் இருக்கிறது. இந்த மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மன அழுத்தம், அல்சிமர் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.

பால்;

பாலில் ப்ரோட்டீன் மற்றும் விட்டமின்கள் நிறைந்து இருக்கிறது. இது நம் மூளை தகவல்களை பரிமாறுவதற்கும் ரொம்ப முக்கியமான சத்துக்கள் ஆகும் .ஆய்வு ஒன்றில் தினமும் பால் குடிப்பவர்களிடம் குளுக்கோட்டின் என்ற திரவம்  சுரப்பதால் மூளையில் எந்த ஒரு நோயும் வராது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது

மஞ்சள்;

மஞ்சள் வெறும் கிருமி நாசினி மட்டுமில்லாமல் மூளைக்கு முக்கியமான பொருள் ஆகும். மஞ்சளில்  உள்ள குக்குமின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது. அதுமட்டுமில்லாமல் மஞ்சள் மூளையில் செரட்டோனின் என்கிற கெமிக்கல் சுரக்கவும் செய்யும். இதை உணவில் எடுத்துக் கொள்ளும் போது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

ஆலிவ் ஆயில்;

ஆலிவ் ஆயிலில் பாலி பினால் என்கிற சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. விட்டமின் இ ,கே அடங்கியுள்ளது இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவியான சத்துக்கள் ஆகும். எனவே ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்து சமைத்துவர இதயத்திற்கும் மன அழுத்தத்திற்கும் நல்லது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay