வெள்ளரிக்காயின் அசத்தலான நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

Published by
K Palaniammal

Cocumber-வெள்ளரிக்காயின் நன்மைகள் மற்றும் அதை சாப்பிடும் முறைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வட இந்தியர்கள் 80 சதவீதம் சாப்பாட்டிற்கு பின் வெள்ளரியை சாலட் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். தென்னிந்தியாவில் 20% மக்கள்தான் உணவுக்குப் பின் வெள்ளரியை பயன்படுத்துகிறோம்  என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளரிக்காயின் நன்மைகள்:

  • நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்களில் வெள்ளரிக்காயும் ஒன்று. நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உடல் சோர்வு அதனால் ஏற்படும் தலைவலி ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நல்ல புத்துணர்வை தரும்.
  • இதில் மிக குறைவான கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
  • வெள்ளரிக்காயில் பீட்டா கரோட்டின் ,பிளேவனாய்ட்ஸ், தாதுக்கள் , பொட்டாசியம் மெக்னீசியம், லிக்னீன்ஸ்  உள்ளதால் நம் உடலில் ஏற்படும் வீக்க  அணுக்களை குறைக்கும் .குறிப்பாக கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கத்தை குறைக்கும். மேலும் கண்களில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு, கரு வளையங்கள் ஆகியவற்றை குணமாக்கும்.
  • இதில் உள்ள சிட்ருலின்  என்ற ரசாயனம் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். மேலும் ஆண்மை குறைவை போக்கும் தன்மையும் உள்ளது. மலச்சிக்கலையும் சரி செய்யும்.
  • குறைந்த கிளைசிமிக் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெள்ளரிப்பழம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.
  • வெள்ளரியில் உள்ள விட்டமின் கே சத்து உணவில் உள்ள  கால்சியத்தை உறுஞ்சி நம் உடலுக்கு கொடுக்கும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகளில் கால்சியம் சத்து கரைய துவங்கும். இந்த கால்சியம் பற்றாக்குறையை தீர்க்க  பெண்கள் வெள்ளரிக்காயை உணவில்  சேர்த்துக் கொள்ளவும்.
  • சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வருகிறது. இதில்  கொலாஜின் இருப்பதால் சருமம் விரைவில் சுருங்காமல் பாதுகாக்கும்.

வெள்ளரிக்காயை சாப்பிடும் முறை:

  • வெள்ளரிக்காயை முதல்முறையாக எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வாமை ,அலர்ஜி ஏற்படலாம் .அதனால் உங்கள் உடலுக்கு ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து சாப்பிடலாம்.
  • இரவில் வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள குகுர்பிட்டின்  என்ற என்சைம்  சிறுநீர் உற்பத்தியை அதிகப்படுத்தி தூக்கத்தை பாதிக்கும்.
  • மேலும் இது குளிர்ச்சியான பொருள் என்பதால் சளி பிடிக்க நேரலாம். அதனால் பகலில் எடுத்துக் கொள்வதே சிறப்பு.தோளில் அலர்ஜி அரிப்பு இருப்பவர்கள் வெள்ளரிக்காயை தவிர்க்கவும்.

எனவே கோடை காலம் தொடங்கி விட்டதால் நம் கண்கள் ஆரோக்கியத்திற்கும் உடல் குளிர்ச்சிக்கும் வெள்ளரிக்காயை உணவில் சேர்த்து கொள்வோம்.

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

1 hour ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago