yam fry
Yam fry recipe-வித்தியாசமான சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
சேனைக்கிழங்கை சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .கை அரிக்காமல் இருக்க கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொண்டு பிறகு சுத்தம் செய்யவும். இப்போது கிழங்கை நறுக்கி நன்றாக கழுவி விட்டு மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து 50 சதவீதம் வேக வைத்துக் கொள்ளவும்.
இப்போது பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வேகவைத்த கிழங்கை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு ஒரு ஸ்பூன், சிறிதளவு கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து தாளித்து வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கி அதனுடன் மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூளை சேர்த்து கலந்து விடவும்.
இப்போது வறுத்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு மிக்ஸியில் தேங்காய் ,ஒரு ஸ்பூன் சோம்பு பட்டை, கிராம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் சேனைக்கிழங்குடன் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் மொறு மொறுவென சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…