சுவையான இஞ்சி பக்கோடா செய்வது எப்படி?

Default Image

சுவையான இஞ்சி பக்கோடா செய்யும் முறை. 

நம்முடைய குழந்தைகளுக்கு , கடைகளில் உணவு வாங்கி கொடுப்பதை  தவிர்த்து, நமது கைகளினாலேயே உணவு செய்து கொடுக்க வேண்டும். தற்போது இந்த  பதிவில் சுவையான இஞ்சி  பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கடலை மாவு – 150 கிராம்
  • அரிசி மாவு – 25 கிராம்
  • இஞ்சி – 50 கிராம்
  • பச்சை மிளகாய் – 50  கிராம்
  • டால்டா – 25 கிராம்
  • ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை – தேவையான அளவு
  • சோம்பு – அரை தேக்கரண்டி
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில், இஞ்சியுடன் பச்சை மிளகாயை  சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றோரு பாத்திரத்தில், அரிசி மாவுடன் கடலை மாவு, ஆப்ப சோடா, உப்பு, கறிவேப்பிலை, சோம்பு, டால்டா, தண்ணீர் மற்றும் இஞ்சி கலவை, இடித்த பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கெட்டியாக பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக கிள்ளி போட்டு நன்றாக பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான இஞ்சி பக்கோடா  தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K