குழந்தைகளுக்கு AC பயன்படுத்துவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Published by
K Palaniammal

Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப  காற்றில் இருந்து  பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஏசி பெரும்பாலானோர் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஏசியை குழந்தைகளுக்கு  பயன்படுத்துவதில் பெற்றோர்களுக்கு பல  சந்தேகம் தோன்றும். குழந்தைகளுக்கு எப்போது இருந்து ஏசி பயன்படுத்தலாம் என்ற கேள்வி இருக்கும் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்து ஏசிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது சில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அது என்னென்னவென்று பார்க்கலாம்.

AC பயன்படுத்தும் போது கடைபிடிக்கவேண்டி வழிமுறைகள் :

ஏசி காற்று நேரடியாக குழந்தையின் மேல் படும்படி படுக்க வைக்க கூடாது.ஏசியின்  டெம்பரேச்சர் 24 டிகிரியில் இருந்து 28 டிகிரி வரை வைத்துக் கொள்ள வேண்டும் .24 டிகிரிக்கு கீழ் வைத்தால் ஹைபோ தெரபி  போன்ற பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

ஏசி அறையை விட்டு குழந்தைகளை உடனடியாக வெளியே எடுத்துச் செல்லக்கூடாது. ஏசியை அணைத்து  ரூம் டெம்பரேச்சருக்கு வந்த பிறகு தான் குழந்தையை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

கை, கால், தலை போன்ற பகுதிகளை நன்றாக மூடி  வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிக குளிர்ச்சி ஏற்பட்டால் சளி பிடிக்க நேரிடும். குறிப்பாக வயிறு மற்றும் நெஞ்சு பகுதி வெதுவெதுப்பாகவே இருக்க வேண்டும்.அதனால் குழந்தைகளின்  உடலை நன்கு மூடி வைக்க வேண்டும்.

வாரம் ஒரு முறை ஏசியின் பில்டரை சுத்தம் செய்த வேண்டும். இல்லை என்றால் அதில் உள்ள தூசிகளின் மூலமும், பாக்டீரியாக்களின் மூலமும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

ஏசி காற்றில் தொடர்ச்சியாக இருக்கும் போது தோல் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது மாய்சரைஸர்[moisturizer] பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு ஏர் கூலர் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் ஏசி என்பது ரூமில் உள்ள காற்றை குளுமையாக மாற்றிக் கொடுக்கும். ஏர் கூலர் வெளியில் உள்ள காற்றை உறிஞ்சி குளுமையாக மாற்றிக் கொடுக்கும் தன்மை கொண்டது.

எனவே ஏர் கூலர் பயன்படுத்தும் போது ஜன்னல் பக்கம் அல்லது கதவு ஓரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும் ,இல்லை எனில் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

ஆகவே ஏசி மற்றும் ஏர் கூலர்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

10 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

11 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

12 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

14 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

14 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

15 hours ago