Kadapa recipe-கும்பகோணத்தில் பிரபலமான கடப்பா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.
தாளிப்பதற்கு தேவையானவை
அரைப்பதற்கு தேவையானவை
முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து கழுவி அதை குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் மற்றும் பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் , உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் விட்டு உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் .பருப்பை நன்றாக மசிந்து கொள்ளவும் .இப்போது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் சோம்பு, கிராம்பு, பட்டை ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது மிக்ஸியில் தேங்காய், கசகசா ,பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் 5 ,இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தக்காளி வதங்கியவுடன் சேர்த்து கிளறவும்.அதிலே மசிந்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும். [கடப்பாவைக்கு தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது மிக கெட்டியாகவும் இருக்கக் கூடாது].
இப்போது அதிலே உருளைக்கிழங்கையும் சிறிதாக நறுக்கி சேர்த்து கலந்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.இடையே கலந்து விட்டுக் கொள்ளவும் .கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா தயாராகிவிடும்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…