மதுரை ஸ்பெஷல்!கெட்டி சால்னா செய்வது எப்படி?

சால்னா –மதுரை ஸ்பெஷல் சால்னா செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
- எண்ணெய் =4 ஸ்பூன்
- பட்டை =2,கிராம்பு=4,பிரியாணி இலை =2,ஏலக்காய் =2
- சோம்பு =1 ஸ்பூன்
- முந்திரி =10
- கசகசா =1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் =10
- பெரிய வெங்காயம் =3
- தக்காளி=3
- புதினா =அரை கைப்பிடி
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- தேங்காய் =அரை மூடி
- வெல்லம் =அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் =2 ஸ்பூன்
- மல்லித்தூள் =1 ஸ்பூன்
- கரம் மசாலா =1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் =2 ஸ்பூன்
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி, தக்காளி சேர்க்கவும்.
தேங்காய் ,கசகசா, முந்திரி,சோம்பு , சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து கிளறி விடவும் .பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கிளறவும் .
இப்போது புதினா இலைகளை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒரு விசில் விடவும்.
விசில் அடங்கியதும் கொத்தமல்லி இலையையும், சிறிதளவு வெல்லமும் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சால்னா தயாராகிவிடும். இதை சாதம், பரோட்டா சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு செய்து சாப்பிடலாம். காய்கறி இல்லாத நேரங்களிலும் இவ்வாறு செய்யலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025