பெற்றோர்களே.! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் இவ்வளவு ஆபத்தாம் .!

mobile

Mobile dangerous -செல்போன் பார்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்   பற்றி இங்கே காணலாம்.

செல்போன் :

வளர்ந்து வரும் நவீன உலகில் செல்போன் நம்வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளது. அதன் பயன்பாடுகளை தவிர்க்க முடியாதது தான். ஆனால் செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுகளினால் பல்வேறு பாதிப்புகள் உள்ளது.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலைகளில் குழந்தைகள் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர் ,அதற்கு காரணம் பெற்றோர்களாகிய நாம் தான். குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களை வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு செல்போன்களை நாம் அறிமுகப்படுத்துகிறோம்.

ஒரு சில குழந்தைகள் சாப்பிடும் போது செல்போன் கொடுத்தால் தான் சாப்பிடுவோம் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். மேலும் பெற்றோர்கள் வேலை நிமித்தமாகவும் குழந்தைகள் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள்.

அப்போது தான் அவர்கள் தொந்தரவு செய்வதில்லை என்றும் அவர்களின் பிடிவாத குணத்தை சமாளிப்பதற்கும் கையில் கொடுத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள்  மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்.

செல்போனால் ஏற்படும் மனரீதியான பிரச்சனை:

செல்போன் அதிகமாக பார்க்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது, எளிதில் அவர்கள் பேசுவதில்லை. மேலும் இவ்வாறு செல்போன் பார்க்கும் குழந்தைகளை ஒரு முறைக்கு மேல் அழைத்தால் தான் திரும்புவார்கள்.மற்ற குழந்தைகளுடன் பழக மாட்டார்கள் .

செல்போனால் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள்:

செல்போனில் உள்ள கதிர்வீச்சுக்கள் மூளையை பாதிப்படைய செய்கிறது. இதனால் கவனிக்குறைவு ஏற்படும். ஞாபக மறதி, கண் கோளாறுகள், கண் பார்வை குறைபாடு போன்றவை ஏற்படுகிறது .

மேலும் ஒரே இடத்தில் ஒரே நிலையில் அமர்ந்திருக்கும் முதுகுத்தண்டு பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் தோள்பட்டை வலி ,முதுகு வலி, கண் வலி போன்றவையும் ஏற்படும். மேலும்  உடல் பருமன் கூட அதிகரிக்கிறது.

நாம் ஒவ்வொரு முறை கண் சிமிட்டும் போது ஒரு திரவம் சுரக்கிறது. அதன் மூலம் தான் நம் பார்வை தெளிவாகத் தெரிகிறது, இப்படி அதிகமாக  செல்போன் , லேப்டாப் பார்க்கும்போது நாம் கண் சிமிட்டுவதை மறந்து விடுகிறோம். இதனால் கண் வறட்சி ஏற்படுகிறது.

தற்போதைய காலங்களில் சிறு வயதிலேயே குழந்தைகள் கண்ணாடிகளை அணிந்திருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விசயம் .

செல்போன் கையில் இருந்தால் இந்த உலகமே கையில் இருப்பது போல் இருக்கும். எங்கு என்ன நடந்தாலும் உடனே நாம் அறிந்து கொள்ளும் வகையில் நவீனம் வளர்ந்து விட்டது. அந்த வகையில் செல்போன் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது தான் .

ஆனால் பெற்றோர்களாகிய நாம் தான் நம் குழந்தைகளுக்கு எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு கொடுத்து அதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செல்போன் காட்டுவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். 2-5  வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும் ,5-10வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரமும் பார்ப்பது போதுமானதாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்