POTATO PODIMAS [file image]
நாம் வீட்டில் வெறும் வைட் ரைஸ் மற்றும் குழம்பு தயார் செய்துவிட்டு, அதற்கு கூட்டாக (சைடிஸ்) என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கிறீங்களா வெறும் உருளைக்கிழங்கை வைத்து வெறும் 10 நிமிடத்தில் சூப்பரான ஒரு ரெசிபியை செய்து விடலாம்.
அதுவும், நம்ம வீட்டுல செய்யப்படும் சப்பாத்தி, பூரி, சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றிற்கு சைடிஷ் ஆக சாப்பிடுவதற்கு இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் அவ்வளவு அருமையாக இருக்கும். சரி வாங்க “உருளைக்கிழங்கு பொடிமாஸ்” செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
‘Potato podimas’ செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ உருளைக்கிழங்கு நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு , அதனை குக்கரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். குறைந்தது 3 முதல் 4 விசில் வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன்பின், உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வதற்கு ஒரு மசாலா தயார் செய்து கொள்ளலாம். மிக்ஸியில் தோல் நீக்காமல் பூண்டு, கூடவே காரத்திற்காக இரண்டு வரமிளாக சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், கூடவே ஒரு முக்கால் ஸ்பூன் சோம்பு, இதனுடன் சிறிதளவு கருவேப்பிலை, ஒரு துண்டு பட்டையும், 1 கிராம்பும் சேர்த்து சிறிது தண்ணி விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு அடுத்ததாக, அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய்யை விட்டு, சூடான பிறகு அரை ஸ்பூன் கடுகு சேர்த்து, நன்றாக பொரிந்து வந்த பிறகு, அதனுடன் வெட்டி வைத்திருந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்கு வதக்கவும்.
அதன்பிறகு, வெங்காயம் பதமாக வதங்கிய பிறகு, வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிய சிறியதாக வெட்டி அதனுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு, மஞ்சப்பொடி சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின்னர், அரைத்து வைத்திருந்த மசாலாவை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு 2 நிமிடம் மூடி வைத்து எடுத்தால் போதும், சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி. இந்த முறையில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சைடிஷ் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த…
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…
இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…