Mental Health tips

மனச்சோர்வில் இருந்து தப்பிக்க வேண்டுமா.? இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்….

By

வாழ்க்கை முறை: மனச்சோர்வு என்பது தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் எதோ வகையில் பாதிக்கும்படி நிலவி வருகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வில் கவனம் செலுத்த முடியாமலும், தன்னுடன் நெருக்கமானவர்கள் உடன் கூட சரியாக பழக முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த மனசோர்வை நீக்க மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளை கூறி வருகின்றனர். அதில் அனைவருக்கும் பொதுவான சில முக்கிய நடைமுறைகளை இதில் காணலாம்…

உடல்நலன் முக்கியம்:

உடலை ஓர் கோவிலாக கருதாவிட்டாலும் பரவாயில்லை. அதனை குப்பை தொட்டியாக பாவிக்மால், முதலில் அதில் உள்ள தேவையற்ற குப்பைகளை (கொழுப்புக்கள், சோம்பல்) நீக்க வேண்டும். நடப்பது, ஓடுதல், நீந்துதல், மிதிவண்டி ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

மன அமைதிக்கு…

மன அமைதிக்கு மிக முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டிய பயிற்சி தியானம் எனும் மூச்சு பயிற்சி. அதன் மூலம் நம் உடலை கவனித்து கொள்ள முடியும். நம் சிந்தனையை கற்றுக்கொள் கொண்டுவர முயற்சிக்க முடியும். நமது தேவையற்ற கோவத்தை அகற்ற முடியும். அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் துவங்க முடியும்.

அன்பானவர்கள் அருகில்…

சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கி நமது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். உங்கள் மனதில் தோன்றுவதை நெருக்கமானவர்களுடன் ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். நெருக்கமானவர்கள் அருகில் இல்லை என்றால், சமூக வலைதளத்தில் நண்பர்கள் குழுவில் கலந்துரையாடுங்கள் . நேர்க்கானவர்களுடன் தினமும் பேசுங்கள்.

ஆரோக்கியம்:

ஹோட்டல் துரித உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அதிகளவு பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதசத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை நமது உணவுப்பட்டியலில் சேர்க்க வேண்டும். அதே போல, நமது தூக்க நேரத்தை அவசியமான நேரம் தவிர மீத நேரத்தில் என்றுமே விட்டுக்கொடுக்க கூடாது. தூங்குவதற்கு ஒருமணிநேரம் முன்பாவது  மின்னணு சாதனங்களை தவிர்க்க வேண்டும்.

முக்கிய பணிகளுக்கு முன்னுரிமை:

நமது வளர்ச்சிக்கு தேவையான பணிகளை செய்வதற்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.  அதற்கான பட்டியலில் முதலில் உருவாக்க வேண்டும். அதில் முக்கிய பணிகளை முதலில் செய்ய வேண்டும். ஒவ்வொரு பணியும் செய்ய வேண்டிய நேரத்தை கணக்கீடு செய்து அதற்குள் அதனை முடிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு நம்மால் ஒரு பணியை முடியாது என சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நேர்மறையான எண்ணங்கள்:

நம்மால் முடியும் என்ற எண்ணம் என்றும் நம் மனதில் இருக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களே நம் மனசோர்வுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. அதனை, சவாலாக ஏற்றுக்கொண்டு அந்த காரியத்தை செய்ய துணியுங்கள். உங்கள் செயலை ஊக்கப்படுத்தும் நபர்கள் உடன் என்றும் தொடர்பில் இருங்கள். என்றும் நம்பிக்கை குறையா வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு பிடித்தவை:

உடற்பயிற்சியை விட உங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடும்போது அதில் கிடைக்கும் மன நிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை. அது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்க உதவும். அதேபோல, ஓவியம், எழுதுவது, இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் மனசோர்வை எளிதில் நீக்கும் காரணிகளாகும்.

டிஜிட்டல் சாதனங்கள்:

தகவல் அதிகமாக சேகரித்தல். அதாவது, ஒரு சினிமா பார்க்கிறோம். புத்தகம் படிக்கிறோம் என்றால் ஒரு விஷயத்திற்காக அதிக நேரம் எடுத்துக்கொள்வோம்.  ஆனால் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் , யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ ஆகியவை மூலம் குறைவான நேரத்தில் அதிகப்படியான தகவல்களை பதிவேற்றி கொள்கிறேன் . இதன் விளைவு கூட மனசோர்வுக்கு காரணமாக அமையும் என கூறப்படுகிறது. முடிந்த அளவு எலக்ட்ரானிக் சாதனங்ளை தேவையற்ற நேரங்களில் தவிர்ப்பது நல்லது.

மனநல ஆலோசனை:

இதனையும் மீறி மனசோர்வு,மனநிம்மதி இல்லாமல் இருப்பது போல் நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் உடனடியாக மனநல நிபுணர்களை சந்தித்து உரிய ஆலோசனை பெற்றிடுங்கள். அதற்கான கருத்தரங்குகளில் தவறாமல் பங்குபெற்றுக்கொள்ளுங்கள்.

 

Dinasuvadu Media @2023