பரவிவரும் ‘பொன்னுக்கு வீங்கி ‘ அறிகுறிகள் என்ன ?.தடுப்பது எப்படி?

பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

mums (1)

பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : மழைக்காலம் மற்றும் குளிர் காலங்கள் வந்துவிட்டாலே வைரஸ் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். புதிது புதிதாக பல வைரஸ் தொற்று நோய்கள் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் மம்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் தமிழில் பொன்னுக்கு வீங்கி என்று அழைக்கப்படுகிறது .இது ஒரு வைரசால் ஏற்படக்கூடிய அம்மை நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நம் முகத்தின் செவி மடலுக்கு கீழ் உமிழ்நீர் சுரப்பி உள்ளது. இது நம்முடைய நாக்கு மற்றும் வாய்ப்பகுதி வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. இந்த சுரப்பியை மம்ஸ் என்று சொல்லக்கூடிய வைரஸ் தாக்கி வீக்கம் அடைவதே பொன்னுக்கு வீங்கி ஆகும்.

இது 5 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களையே அதிகம் பாதிக்கிறது. மேலும் இந்த வைரஸ் தாக்கி 14 லிருந்து 18 நாட்களுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகள் தோன்றுவதாக மருத்துவர்க கூறுகின்றனர்.

பொன்னுக்கு வீங்கி அறிகுறிகள் :

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பிறகு கண்ணம் வலி, வாந்தி, காய்ச்சல், உடல் பலவீனம், தாடை பகுதியில் வீக்கம், உணவு விழுங்கும் போதும், வாய்களை திறக்கும் போதும் தொண்டை மற்றும் கழுத்து பகுதியில் வலி ஏற்படுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்றாக உள்ளது. இருமல், தும்மல், தொடுதல் போன்ற காரணத்தால் மற்றவருக்கு இந்த நோய் எளிதில் பரவிடும். மேலும், நூற்றில் ஒருவருக்கு இதனால் விரை வீக்கம் மற்றும் மூளை காய்ச்சலை கூட ஏற்படுத்துவதாக டாக்டர் கார்த்திகேயன் தனது யூ-டியூப் பக்கத்தில் அறிவுறுத்துகின்றார். மேலும், இது மிகவும் அரிதானது என்றும் அதற்காக அனைவரும் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறுகின்றார். பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் அதிகம் கொடுக்க வேண்டும். நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கென தடுப்பூசிகளும் உள்ளதால் வலி அதிகமானால் மருத்துவ உதவியை கட்டாயம் அணுக வேண்டும். சிலர் இதற்கு தங்கச் சங்கிலி அணிந்தால் சரியாகிவிடும் என எண்ணி அவ்வாறு செய்யும் வழக்கமும் இருந்து வருகின்றது.

மேலும் வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் பூசும் வழக்கமும் இருந்து வருகின்றது. இந்த பொன்னுக்கு வீங்கி பொதுவாக இரண்டு வாரங்களிலேயே குணமாக கூடியதாகும். முற்காலத்தில் இந்த நோய்க்கான காரணமும் சிகிச்சை முறையும் அறியப்படாத நிலையில் இருந்ததால் இதை அம்மை நோயாக கருதி அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் தங்கச்சங்கிலியை கழுத்தில் அணிந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே பொன்னுக்கு வீங்கி என்ற பெயர் உருவாயிற்று. தற்போது இந்த வைரஸ் தாக்கம் அதிகம் பரவி வருவதால் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்