மும்பை : மெலிந்த தோற்றத்தில் நடிகை சமந்தா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். நடிகை சமந்தா இன்று காலை சந்தோஷமான செய்தியை அறிவிக்கப்போகிறேன் என அறிவித்து இருந்தார். அந்த சந்தோஷமான செய்தி என்னவென்றால், சமந்தா World Pickleball League 2024 தொடரில் சென்னை அணிக்கு உரிமையாளராகியுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சென்னை அணியின் உரிமையாளராக பொறுப்பேற்றது பற்றி சமந்தா பேசுகையில் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே PickleBall […]
சென்னை : வேட்டையன் படத்தின் புதிய பாடல் விரைவில் வெளிவரும் என அனிருத் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையான்” திரைப்படத்தின் பாடல்கள் அப்டேட் எப்போடா? வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இசைமைப்பாளர் அனிருத் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். ஆம், அனிருத் தனது X தளத்தில், வேட்டையன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘மனசிலாயோ, ஹண்டர் வந்தார்’ […]
சென்னை : விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் தாசரதி, கணேஷ் சரவணன் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவிப்பதற்கு முன்னதாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கங்களில் நேரத்தை மட்டும் பதிவு செய்வார். அந்த நேரத்தில் படத்தை பற்றிய அப்டேட் எதாவது வெளியாகிவிடும். அப்படி தான் ஆக 20 மாலை 4.33 என்று […]
சென்னை : எங்க படத்தை மோசமா விமர்சிக்கிறார்கள் எனவும், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் சிலருக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணம் குறித்தும் பா.ரஞ்சித் பேசி இருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் வாழை படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், மிஷ்கின், பா.ரஞ்சித், ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படம் பற்றியும், இயக்குனர் […]
சென்னை -சிறகடிக்கை ஆசை தொடரில் இன்றைய [ஆகஸ்ட் 20]விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவின் மூலம் அறியலாம். சத்யாவோட பிறந்தநாளுக்கு முத்து மீனாவை போக கூடாதுன்னு சொல்லிட்டாரு ..இதை பத்தி மீனா யோசிச்சிட்டு இருக்காங்க .அப்போ அங்க சுருதி வந்து மீனா ஏன் டல்லா இருக்கீங்க ன்னு கேக்குறாங்க.. மீனாவும் முத்து சொன்ன விஷயத்தை சொல்றாங்க. உங்க தம்பி பிறந்த நாளுக்கு அவர் ஏன் போகக்கூடாதுன்னு சொல்றாரு. அவரு சொன்னா நீங்க இதெல்லாம் கூட கேப்பீங்களா.. நீங்க போயிட்டு […]
கேரளா : மலையாள திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017-ல் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப், பிரபல நடிகையை கடத்திய விவகாரத்தில், மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை 2019-ம் ஆண்டு அரசிடம் சமர்ப்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை […]
சென்னை : வாழை படம் ஒரு படமாகவே இருக்காது எனப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பா.ரஞ்சித், கவின், மிஷ்கின், ராம், நெல்சன் எனப் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். அப்போது, வழக்கம் போல் சர்ச்சைகளைக் கிளப்பும் வகையில் பேசும் மிஷ்கின் இந்த படத்தின் விழாவிலும் சர்ச்சையைக் […]
சென்னை : வாழை திரைப்படத்தின் பார்த்து வியந்த சிம்பு, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறிய வயதில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்றில் பயணித்தபோது அந்த லாரி விபத்தில் சிக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த ‘வாழை’ படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான […]
சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ‘வாழை’ படத்தின் டிரைலர் வெளியானது. வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். படம் வெளியாவதையொட்டி படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் பார்க்கும்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. எதிர்பார்ப்பு அதிகமானது போல டிரைலரில் எமோஷனல் காட்சிகளையும் மாரி செல்வராஜ் வைத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக, […]
சென்னை : விஜய் நடித்துள்ள கோட் படத்தில் தோனி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்க வாய்ப்புள்ளதாக பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு ஆக 17-ஆம் தேதி வெளியிட்டது. டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். டிரைலரில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளில் இந்திய […]
சென்னை : கொட்டுக்காளி படத்தினை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்குக் கால் செய்து பாராட்டிப் பேசியுள்ளார். சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது ‘கொட்டுக்காளி’ படத்தினை பார்த்து விட்டு சிவகார்த்திகேயன் அவரிடம் கூறிய விஷயத்தை […]
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா படமும், ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படங்களும் உள்ளது. இதில் கங்குவா படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று மட்டும் படக்குழு அறிவித்து […]
சென்னை : கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது முதல் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி வரை பல அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது. எனவே, ஆக 19 இன்றைய நாளின் முக்கிய சினிமா தகவல்களை இந்த பதிவில் நாம் காணலாம்… கைதி 2 அப்டேட் கைதி படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான அப்டேட் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் தற்போது […]
சென்னை : ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் ஆக 17 வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து டிரைலர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரில் […]
ஹைதராபாத் : சூர்யா நடித்து வரும் கங்குவா படம் பல சாதனைகளை முறியடித்து புது சாதனைகளை படைக்கும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தால் நிச்சியமாக தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவே பெரிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கலான் படத்தின் […]
சென்னை : கோட் படத்தின் டிரைலர் முதல் தங்கலான் 2 படம் குறித்த அப்டேட் வரை ஆக 17-ஆம் தேதி முக்கிய சினிமா செய்திகளை பற்றி பார்க்கலாம். கோட் டிரைலர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட் ‘ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. கல்கி ஓடிடி அப்டேட் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் நாக் அஷ்வின் […]
சென்னை : கங்குவா படம் வெளியான பிறகு ஒரு மாதம் படத்தை பற்றி தான் உலகம் முழுவதும் பேசுவார்கள் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். சூர்யா நடித்து வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆக 12-ஆம் தேதி படத்திற்கான டிரைலர் வெளியானது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் என அனைத்தும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை […]
டெல்லி : திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியத் திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய திரைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும்தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்குத் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் […]
சென்னை : கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்க்காக தேசிய விருது கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் – பாகம் 1 : இயக்குனர் மணி ரத்னம் டைரெக்க்ஷனில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், சரத்குமார் போன்றவர்கள் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் வெளியான […]
டெல்லி : 2022ஆம் வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏ.ஆர்.ரகுமான், நித்யா மேனன், அன்பறிவு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய திரைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் சினிமா தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்குத் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 70வது தேசிய விருது நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட திரைக் கலைஞர்களின் விவரங்கள் பின்வருமாறு… சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா). சிறந்த நடிகை – நித்யா […]