சென்னை :மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ‘வாழை’படத்தின் டிரைலர் வெளியானது.
வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். படம் வெளியாவதையொட்டி படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் பார்க்கும்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
எதிர்பார்ப்பு அதிகமானது போல டிரைலரில் எமோஷனல் காட்சிகளையும் மாரி செல்வராஜ் வைத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக, சிறுவன் தற்கொலைக்கு முயற்சி செய்வதில் இருந்து இசை வரை அனைத்தும் நம்மளை எமோஷனலாக வைத்துள்ளது.
unknown nodeநெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்து அதில் பயணம் செய்த சிறுவர்கள் ஒரு சிலர் காயத்துடன் தப்பித்தனர். அந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என மாரி செல்வராஜ் பேசி இருந்தார். எனவே, டிரைலரை வைத்து பார்க்கையில், அந்த தகவல் உண்மை தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், முன்னதாக அந்த பேட்டியில் பேசும்போது தன்னுடைய சின்ன வயதில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் ‘வாழை’ படத்தை எழுதி இருந்தேன் என கூறியிருந்தார். அவர் பேசியதையும் டிரைலரையும் வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக பெரிய அளவில் விமர்சன ரீதியாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
