மனசிலாயோ.. வேட்டையன் முதல் சிங்கிள் ரெடி.! கிரீன் சிக்னல் கொடுத்த அனிருத்.!

Anirudh - Rajinikanth

சென்னை : வேட்டையன் படத்தின் புதிய பாடல் விரைவில் வெளிவரும் என அனிருத் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையான்” திரைப்படத்தின் பாடல்கள் அப்டேட் எப்போடா? வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இசைமைப்பாளர் அனிருத் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

ஆம், அனிருத் தனது X தளத்தில், வேட்டையன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘மனசிலாயோ, ஹண்டர் வந்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார்.

தற்போது, படம் போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதன் மூலம் அமிதாப் பச்சனும், ரஜினிகாந்தும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ஜிஷு சென்குப்தா, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர, ரோகினி, அபிராமி மற்றும் வி.ஜே.ரக்ஷன் ஆகியோர் இப்படத்தில் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட் வேலைகளை கவனித்துள்ளார். பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய படங்களைத் தொடர்ந்து அனிருத் ரஜினிகாந்துடன் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் இதுவாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson
Vikram in Veera dheera sooran film posters
Donald Trump and cars