சென்னை வந்தடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், இன்று முதலமைச்சரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார் என கூறப்பட்டது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் வருவதாகவும் கூறப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவுக்கு 10 எம்பிக்கள் பலம் உள்ள நிலையில், ஆதரவு கோரி தமிழகம் முதலமைச்சரை சந்திக்கிறார்கள்.
இந்த நிலையில், தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்திக்க உள்ளார் டெல்லி முதல்வர். அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக, முதலமைச்சர் சந்தித்து ஆதரவு கோருகிறார் கெஜ்ரிவால். மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025