MK Stalin and Mamata Banarjee [Image source : Twitter/@karthickselvaa]
கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். முதல்வர்கள் மம்தா பானர்ஜி மற்றும் ரங்கசாமி விழாவுக்கு வரவில்லை.
கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி, புதிய முதல்வராக சித்தராமையாவை அறிவித்துள்ளது. இதன் மூலம் 2வவது முறையாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் சித்தராமையா.
இந்த பதவியேற்பு விழா இன்று மாலை பெங்களூருவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதனை நாளுமன்ற கூட்டணி தொடக்கமாகவும் அமைக்க திட்டமிட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டு சென்றார். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விழாவுக்கு வரவில்லை எனவும் அவர் கட்சி சார்பாக முக்கிய தலைவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த விழாவுக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப்…
கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியாவுக்கு எதிரான புதிய வரி மற்றும்…