ராஜஸ்தானில் பட்ட பகலில் முக்கிய அரசியல் தலைவர் சுட்டுக் கொலை..!

Published by
murugan

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பட்ட பகலில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி இன்று தலைநகர் ஜெய்ப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷியாம்நகர் பகுதியில் உள்ள சுக்தேவ் சிங் கோகமேடி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால்  சுட்டனர். அதன் பிறகு அவர் மெட்ரோ மாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  கோகமேடியின் வீட்டிற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.இந்த செய்தி மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. பின்னர் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுக்தேவ் சிங் கோகமேடி மீது நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டார். தோட்டாக்கள் சுக்தேவ் சிங்  மீது எங்கு தாக்கியது என்பது இதுவரை தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்து இதுவரை எதுவும் தகவல் தெரியவில்லை, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தனி அமைப்பை உருவாக்கிய சுக்தேவ் சிங் கோகமேடி:

சுக்தேவ் சிங் கோகமேடி ராஷ்ட்ரிய கர்னி சேனாவு அமைப்புடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு கர்னி சேனா அமைப்பில் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா என்ற பெயரில் தனி அமைப்பை உருவாக்கினார்.

 

 

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago