சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் செயல்படுத்தும் வகையில் 101 ராணுவத் தளவாடக் கருவிகளை இறக்குமதி செய்யத் தடை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இறக்குமதிகள் மீதான தடை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து இந்திய பாதுகாப்புத் துறையினருக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கம், இதனால், அவர்கள் உள்நாட்டு தயாரிப்பை இலக்கை அடைய சிறந்த முறையில் தயாராக உள்ளனர் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த திட்டத்தின் மூலம் துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கபடும், அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட 101 பொருட்களின் பட்டியலில் எளிய பாகங்கள் மட்டுமல்லாமல் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், ரேடார்கள் மற்றும் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன என கூறப்படுகிறது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்…
மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…