கடந்த 6 மாதத்தில் 11,568 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து 1,800 -க்கும் மேற்பட்டடோர் கைது செய்தததாக ஹரியானா போலீசார் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் 1,800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 11,568 கிலோ சட்டவிரோத போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததன் மூலம் ஹரியானா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஜிபி நாயகம் மனோஜ் யாதவா கூறுகையில், இந்த ஆண்டு, போதைப்பொருள் சட்டத்தின் கீழ் ஜூன் வரை 1,343 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில் 1,821 பேர் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 11,568 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் 680 கிராம் சட்டவிரோத மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் முயற்சியில், தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் குறித்த விவரங்களை டிஜிபி, மீட்பு பட்டியலை வெளிட்டார். அதில், poppy husk 8043.2 கிலோவும், 3,150 கிலோ கஞ்சா மற்றும் 243 கிலோ அபின், 25.5 கிலோ ஹெராயின் ஆகியவை அடங்கும். மேலும், தடைசெய்யப்பட்ட மருந்துகளின் வகையின் கீழ் 10.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகள், ஊசி மற்றும் சிரப் ஆகியவை ஜனவரி முதல் ஜூன் வரை கைப்பற்றப்பட்டன.
சிர்சா மாவட்டத்தில் 563 பேரைக் கைது 401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல ஃபதேஹாபாத்தில் 163 வழக்குகளும், குருக்ஷேத்ராவில் 81 வழக்குகளும், ஹிசாரில் 77 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என டிஜிபி கூறினார்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…